என்றும் தன் ரசிகர்களுக்காக வாழும் தளபதி விஜய்

cinema news

டிவிட்டரில் 40 லட்சம் பேர் பின்தொடரும் நிலையில், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே!’ என்று சொல்வதோடு நிறுத்தாமல் அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக, தன் ரசிகன் உருவாக்கிய ஒரு டிஜிட்டல் புகைப்படத்தினை தனது பிராஃபெயில் படமாக பதிவேற்றம்  செய்துள்ளார். தன் ரசிகனுக்கு  முக்கியத்துவம் அளிப்பதில் தளபதி என்றும் தவறியதில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்று. நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் பரிசாக ‘ வாரிசு ‘ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், தளபதியின் இந்த செயல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது.