கடல போட பொண்ணு வேணும்

News
0
(0)
குழந்தை பருவத்திலிருந்தே திரைத்துறையில் இருக்கும் ஒரு சில கலைஞர்களுக்கு சினிமாவுடன் பிரிக்க முடியாத ஒரு பந்தம் இருக்கும். குழந்தை நட்சத்திரங்களாக இருந்து குடும்ப ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவை பெற்று, இறுதியாக நல்ல வரவேற்புடன் நாயகிகளாக உயர்வார்கள், அந்த வகையில் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நடிகை மனிஷாஜித்துக்கும் அப்படியே பொருந்தும், அவர் அடுத்த படமான “கடல போட பொண்ணு வேணும்” படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ஆர்வமாக காத்திருக்கிறார்.
சினிமா துறையில் தனது நீண்ட கால பயணத்தை பற்றி நடிகை மனிஷாஜித் கூறும்போது, “எனது முதல் படம் கம்பீரம். அதில் சரத்குமார் சாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்தேன். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 40 படங்களில் நான் நடித்திருக்கிறேன். சஞ்சீவ் நாயகனாக நடித்த நண்பர்கள் கவனத்திற்கு படத்தில் முதன் முறையாக நாயகியாக நடித்தேன், அதனை தொடர்ந்து கமர்கட் படத்தில் நடித்தேன், அடுத்த படம் ஆண்டாள் விரைவில் வெளியாக இருக்கிறது. எனது தற்போதைய படமான “கடல போட பொண்ணு வேணும்” பற்றி சொல்வதென்றால், வித்தியாசமான கரு மற்றும் ஒரு அணுகுமுறையில் உருவாகியுள்ள ஒரு திரைப்படம். இந்த படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் திறமையானவர்கள். அசார் உடன் நடிக்கும்போது அவர் நம்மை தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். இயக்குனர் ஆனந்த் அவருக்கு என்ன தேவை என்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பார். எங்களை போன்ற கலைஞர்கள் எப்போதும் எங்கள் பாணியில் நடிக்க முயற்சி செய்வது பொதுவான விஷயம். ஆனால் செட்டுக்குள் நுழைவதற்கு முன்பே கலைஞர்களிடமிருந்து என்ன வாங்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்திருப்பார். அவர் எங்களை சிறப்பாக நடிக்க வைக்க நடித்து காட்டவும் தயங்க மாட்டார். இந்த படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான விஷயம். அவர்கள் என்னை ஒரு குடும்ப உறுப்பினரை போலவே நடத்தினார்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எனக்கு அதிக இடம் கொடுத்தார்கள்” என்றார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.