‘கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு

Speical
0
(0)

‘கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.

‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை  தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் கலைமாமணி வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘அழகா’  பாடலை  சுசித்ரா பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.

முதல் பாடலை முத்து எழுத சாய் கிஷோர் இசையமைத்துள்ளார் மற்ற நான்கு பாடல்களையும் சங்கர் ஹாசன் எழுத சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்

ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் ஆடியோ மீடியா  டி செல்வகுமார் ஒளிப்பதிவு – இசைப்பதிவு, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் தனது குழுவுடன் இணைந்து செவ்வனே செய்திருக்கிறார்.

இந்த இசை ஆல்பத்தை  செ.ராஜேந்திரன் இ. ஆ. ப அவர்கள் வெளியிட, பாடகி மாலதி பெற்றுக் கொண்டார்.

இந்த ஆல்பத்தின் பாடல்களை கோலவிழி அம்மன் யூடியூப் சேனலிலும், கோலவிழி அம்மன் கோயில் என்ற முகநூல் பக்கத்திலும் பார்த்து, கேட்டு மகிழலாம்.

முகநூல் பக்கத்திற்கான முகவரி: http://www.facebook.com/gayakiselva

பாடல்களை பின்வரும் யூடியூப் சேனல் லிங்குகள் மூலமாகவும் கண்டு மகிழலாம்.

1 வா வா கணபதி
https://youtu.be/2oknV3bBHEc

2 மயிலை வாழும்
https://youtu.be/omf7k4qa4cs

3 உக்கிர காளி பத்ரகாளி
https://youtu.be/75IiWGmj0lw

4 நாடு செழிக்க
https://youtu.be/75IiWGmj0lw

5 அழகா
https://youtu.be/L0DL_Wp5E8U

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.