தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான நடிகர் கமலஹாசனின் கலையுலகப் பயணம் 60 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில் , அதனை கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள www.ikamalhaasan.com என்ற இணையதளத்தை நடிகர் சூர்யா இன்று மாலை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டார்.மேலும் , நடிகர் கமலஹாசனின் பெருமை பேசும் இந்த இணையதளத்தை வெளியிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை எண்ணி ஒரு ரசிகனாக தான் கர்வம் கொள்வதாகவும் நடிகர் சூர்யா கூறியுள்ளார்.