ஜப்பான் – திரைவிமர்சனம் ( சரவெடி )

Uncategorized
0
(0)

ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜூ முருகன் இதுவரை பயணித்த வழியில் இருந்து மாறுபட்டு கமர்சியல் காலத்தில் நம்மை அசத்த வந்து இருக்கிறார். கமர்சியல் காலத்துக்கு ஏற்ப கார்த்தி , அனு இமானுவேல் ஜித்தான் ரமேஷ் சந்திரசேகர் சுனில் கே.எஸ்.ரவிக்குமார் விஜய் மில்டன் மற்றும் பலர் நடிப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் தீபாவளி கொண்டாட்டமாக திரைக்கு இன்று வந்திருக்கும் படம் தான் “ஜப்பான்”.

சில வருடங்களுக்கு முன் திருச்சியில் பெரும் நகைக்கடை ஒன்றில் மிகப்பெரும் திருட்டு ஒன்று அரங்கேறியது. சுவற்றில் துளையிட்டு பல கோடி மதிப்புள்ள நகைகளை திருடர்கள் திருடிச் சென்றார்கள்.
அச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காவல்துறைக்கு மிகவும் சவாலாக இருந்த இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக முருகன் என்பவனை கைது செய்தது. அதன்பின், அந்த முருகனை பற்றி அடுக்கடுக்கான கதைகள் வெளிவந்தது.

இந்த கதையை மையப்படுத்தி இந்த ஜப்பான் உருவாக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரும் நகைக்கடை ஒன்றில் சுமார் 200 கோடி மதிக்கத்தக்க நகைகள் திருடு போகின்றன. இந்த நகைகளை கொள்ளையடித்தது, பிரபல திருடனான ஜப்பான் (கார்த்தி) தான் என்று கண்டு பிடிக்கின்றனர். அதற்கான தடயங்கள் இருப்பதாக கூறி, ஜப்பானை தேடுகின்றனர்.

சுனில் தலைமையிலான ஒரு டீமும், விஜய் மில்டன் தலைமையிலான ஒரு போலீஸ் டீமும் கார்த்தியை தேடி வருகின்றனர்.

சில நாட்கள் கழித்து, அந்த திருட்டை கார்த்தி செய்யவில்லை என்று அறிகிறார்கள். ஆனால், காவல்துறை தலைமையின் நெருக்கடியால், ஜப்பான் தான் திருடன் என்று அவரை என்கெளண்டர் செய்ய திட்டமிடுகிறது காவல்துறை.கடைசியாக அந்த திருட்டை செய்தது யார்.? எதற்காக கார்த்தி இதில் சிக்கினார்.?? இறுதியில் என்ன நடந்தது என்பதை கூறும் கதையாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் கார்த்தி, இப்படத்திலும் தனது உடையிலிருந்து, பேச்சு, உடல் மொழி என அனைத்திலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆக்‌ஷனிலும் அதிரடி காட்டியிருக்கிறார்.கமர்சியல் கலாட்டா கார்த்திக்கு கைவந்த கலை அதை மிக சிறப்பாக செய்துள்ளார். அவர் வசனம் பேசும் பல இடங்களில் கைதட்ட வைக்கிறது. அவர் பேசும் ஸ்டைல் மட்டும் கொஞ்சம் சலிப்பை உண்டுபண்ணுகிறது.

சுனில் மற்றும் விஜய் மில்டன் இருவரும் தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார்கள். சுனிலுக்கு டப்பிங் கொடுத்தது அருள்தாஸ் என்பதே அப்படியே தெரிகிறது. அதற்கு அவரையே நடிக்க வைத்திருந்திருக்கலாம்.

ஜித்தன் ரமேஷ் மற்றும் வாகை சந்திரசேகர் இருவருமே சரியான தேர்வு தான் அந்தந்த கதாபாத்திரத்திற்கு.அதே போல படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மிக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

ஜி வி பிரகாஷின் இசையில் பாடல்கள் ஓகே ரகமாக கடந்து சென்றாலும், பின்னணி இசை ஆறுதல் அளித்துள்ளது.

ரவி வர்மாவின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அசர வைத்திருக்கிறது.

கதையில் இன்னும் சற்று அதிகமாகவே கவனம் செலுத்தியிருந்திருக்கலாமோ என்று தோன்றியது. அம்மா சென்டிமென்ட் காட்சிகளில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் கார்த்தி பேசும் ஸ்டைலில் செண்டிமெண்ட் எடுபடவில்லை . மற்றபடி, சிறந்த பொழுதுபோக்கு படமாக “ஜப்பான்” இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இயக்குனர் ராஜூமுருகன் கமர்ஷியலை கையில் எடுத்து அதை காண கச்சிதமாக கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும்.

முதல் பாதியைவிட இரண்டாம் பாகம் இரண்டாம் பாதியில் வேகமெடுத்து நகர்கிறது. க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட அம்மா செண்டிமெண்ட் காட்சிகள் கண்களை குளமாக்கியது.

மொத்தத்தில் ஜப்பான் ஜப்பான் தான் சைனா இல்லை

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.