full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

தொடர் பிரச்சனைகளால் ஆன்மீகம் பக்கம் திரும்பும் பட்டதாரி நடிகர்

நடிகராக அறிமுகமாகி, பின்னர் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்து வந்த பட்டதாரி நடிகர், தற்போது இயக்கத்தில் இறங்கி உள்ளார். அவரது இயக்கத்தில் முதல் படம் ஒன்று உருவாகி விரைவில் ரிலீசாக உள்ளது.

சமீபத்தில் திரையுலக பிரபலங்களின் லீலைகளை பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்டு தமிழ்சினிமாவையே கதிகலங்க வைத்தார். அதில் பட்டதாரி நடிகரின் படங்களும் வெளியாகி தீயாக பரவி வந்தது. அதனால் அவரது குடும்பத்தில் இவரை பயங்கரமாக திட்டவிட, என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடி வருகிறாராம்.

அதற்கு முன்பே பால் நடிகை, தனது கணவரை பிரிய இவரே காரணம் என்று கூறப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, நடிகரை தங்களது மகன் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது. தொடர்ந்து தன்னை வாட்டிவதைக்கும் இந்த பிரச்சனைகளில் இருந்து மீள என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நடிகருக்கு தற்போது அவரது குடும்ப ஜோசியர் ஒருவர் மூலமாக புதிய யோசனை ஒன்று முளைத்துள்ளதாம்.

அதாவது, நடிகரின் குடும்ப ஜோசியர் ஒருவர் அவரை ஆன்மீகத்தில் ஈடுபட அறிவுரை வழங்கி உள்ளாராம். ஜோசியரின் அறிவுரை நடிகருக்கும் பிடித்துப்போக விரைவில் ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறாராம். ஆன்மீகத்தில் ஈடுபடுவது இருக்கட்டும், அங்கேயாவது சர்ச்சையை கிளப்பாமல் இருப்பாரா? என்று கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருவதாக கூறப்படுகிறது.