full screen background image
Search
Saturday 23 November 2024
  • :
  • :
Latest Update

நல்ல படங்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம்!-ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் பேட்டி

தமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்ததுராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது

இந்நிறுவனம் ஹிப் ஆப் தமிழா ஆதிநாயகனாக அறிமுகமான
” மீசையை முறுக்கு” திரைப்படத்தின் தமிழக உரிமையை முதல் படமாக வாங்கி வெளியிட்டு வெற்றிப் பயணத்தை தொடங்கியது
தமிழ் சினிமாவின் பாக்ஸ்ஆபீஸ் நட்சத்திரங்களான அஜித்குமார், விஜய், சூர்யா, ஆர்யா,தனுஷ் நடித்த படங்களும் அடங்கும்.

இந்நிறுவனம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் 2017 தீபாவளிக்கு வெளியான “ மேயாத மான்” ப்ளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜீத்குமார் நடித்து வெளியான “வேகம், விவேகம்” படத்தின் சில ஏரியாவிநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது அமலாபால் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்திய “ஆடை, மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியானமகாமுனி, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானகொலைகாரன், ஜெயம் ரவி நடித்தகோமாளி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானசிந்துபாத்,
அசுர வெற்றிபெற்றஅசுரன், பெட்ரோமாக்ஸ் மற்றும் நான் சிரித்தால்” என பல வெற்றிபடங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நிறுவனமாக ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது

2019 ஆம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆண்டாகும். ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து, மிகச்சிறந்த கதையம்சம் உள்ள படங்களை வாங்கி வெளியிட்டது விநியோக வியாபாரத்தில் முன்ணனி நிறுவனமாக வளர்ந்துவரும் நிலையில் 2019ல் ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்
T. முருகானந்தம் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார்அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில்
குருதி ஆட்டம் படத்தை தொடர்ந்து YouTube Put Chutney புகழ் ராஜா மோகன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாக கொண்ட, காமெடி கமர்ஷியல் படத்தை இரண்டவாது படைப்பாக தயாரித்து வருகிறார். அதனை தொடர்ந்து எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கொரானா காலத்திலும் திரைப்பட தயாரிப்புக்கான திட்டமிடலை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுத்தினார் முருகானந்தம்.

தமிழ் சினிமா இயக்குநர்களில் தனக்கு என்று ரசனைமிக்க சினிமா பார்வையாளர்களை கொண்ட மிஷ்கின் இயக்கத்தில்ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக “பிசாசு 2” படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் பிசாசு-2 படத்தின் வியாபாரத்தை முடிக்க முண்ணனி விநியோகஸ்தர்கள் தற்போதே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது படங்களை தேர்வு செய்வதில் ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நம்பகதன்மையை உறுதிசெய்து உள்ளதுமேலும் தமிழில் சில முக்கிய படைப்புகளின் உலகளாவியஉரிமையை வாங்குவதற்கான வியாபார பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட்
மாஸ்டர் பீஸ் புரடக்க்ஷன் நிறுவனத்திடமிருந்து நடுகாவேரி இயக்கத்தில் கயல் ஆனந்தி, ரோகித் ஷ்ராஃப் நடிப்பில் உருவாகும் “கமலி” படத்தின் உரிமையை பெற்றிருக்கிறது. மேலும் ஆகாஷ் பிரபு, ஜானகி, ஐஸ்வர்யா முருகன், அருன் மற்றும் வித்யா பிள்ளை நடிக்கும் “மாயபிம்பம்” படத்தின் உரிமையையும் பெற்றுள்ளது. ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மிகப்பெரும் வெளியீடாக ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள “பூமி” படத்தின் தமிழகத்தில் உள்ள ஒன்பது ஏரியா உரிமைகளில்ஏழு பகுதிகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சமீப காலமாக சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி இருக்கும் இருட்டு அறையில் முரட்டுகுத்து பட இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் நாயகனாக நடித்து இயக்கி இருக்கும் அதன் அடுத்த பாகமாக உருவாகியுள்ள
“இரண்டாம் குத்து” படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது இப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

திரையுலகில் தொடர்ந்து முண்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களை 2021ல் தயாரிக்கவுள்ள ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் முருகானந்தத்துடன் நடைபெற்ற நேர்காணல்…

☎திரைப்படத் தயாரிப்பு மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படும் நேரத்தில் நீங்கள் தயாரிப்பில் இறங்கத் துணிந்தது எப்படி?

நல்ல படங்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம். எனவே நம்பிக்கையுடன் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறேன்.

☎விநியோகஸ்தர்களின் ரீஃப்ண்ட், திரையரங்கு வசூலில் வெளிப்படைத்தன்மையின்மை ஆகியன குறித்து..?

ஒரு படம் நன்றாக ஓடும் என்று நம்பி வெளீயிடுகிறோம். அது தப்பாகிவிட்டால் ரீஃப்ண்ட் கொடுக்கவேண்டி வரும். நாம் தொடர்ந்து இந்த வியாபாரத்தில் இருப்பதால் அடுத்தடுத்த படங்களில் சரி செய்துவிடலாம்.
திரையரங்கு வசூலைப் பொறுத்தவரை எங்காவது ஒரு சில இடங்களில் வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது.

☎திரையரங்குக்காரர்கள் வசூல் தொகையைப் பல மாதங்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

முதல்நாள் வசூலை அடுத்த நாளே தருகிறவர்களும் இருக்கிறார்கள். மாதக்கணக்கில் இழுக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் தொழில் செய்தாக வேண்டும்.

☎நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் திரைப்படத் தொழில் நசிவதாகச் சொல்லப்படுவது பற்றி..?

உண்மைதான், சில படங்களில் படத்தின் மொத்தச் செலவைக் காட்டிலும் நடிகரின் சம்பளம் அதிகம் என்றாகிறது. அங்கு தொடங்குகிற சிக்கல் திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்வதுவரை வந்து நிற்கிறது.
தயாரிப்பாளர்களுக்குள் முழுஒற்றுமை ஏற்பட்டால்தான் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணமுடியும்.

☎நீங்கள் வெளியிடும் இரண்டாம்குத்து சர்ச்சைக்கு ஆளாகியிருக்கிறதே?

இயக்குநரின் முந்தைய படங்கள் வெற்றி மற்றும் அதனுடைய பட்ஜெட் போன்ற விசயங்களைப் பார்த்துத்தான் படங்களை வாங்கி வெளியிடுகிறோம். நான் படம் பார்க்கவில்லை.

☎ சர்ச்சை வந்துவிட்டபின் படத்தில் மாற்றம் செய்யப்போகிறீர்களா?

அது முழுக்க முழுக்க இயக்குநரின் உரிமை. அதில் நான் தலையிடமாட்டேன்.

☎ உங்களுக்கு சமுதாயப் பொறுப்பு இல்லையா

இருக்கிறது. எங்கள் வியாபாரத்தில் அத்திபூத்தாற்போல் இதுபோன்ற சிக்கல்கள் வருவதுண்டு.அவற்றைச் சரி செய்து வெளியிடுவோம்.

☎ பூமி படத்தின் சென்னை செங்கல்பட்டு தவிர தமிழக விநியோக உரிமை பெற்றிருக்கிறீர்கள். அது நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறதே?

அதுகுறித்து தயாரிப்பாளருடன் பேசியிருக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.