full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நாய்க்கு டப்பிங் பேசிய சூரி

ஶ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘அன்புள்ள கில்லி’. நடிகை சிவரஞ்சனியின் மகன் மைத்ரேயா, இதில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீதர் சாகர், மாலா தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. கில்லி என பெயர் கொண்ட லாப்ரடார் வகை நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு சூரி குரல் கொடுத்துள்ளார்

இதுபற்றி இயக்குனர் ஶ்ரீநாத் ராமலிங்கம் கூறியதாவது: இதுவரை வெளியான மனிதன், நாய் உறவு தொடர்பான படங்களிலிருந்து இது வித்தியாசமானதாக இருக்கும். ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் தான் நாய்க்கு சூரியை குரல் கொடுக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தார். இதுதொடர்பாக சூரியிடம் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். அவரது பின்னணி குரல் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.