full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நாளை முதல் லைசென்ஸ் கட்டாயம், மீறினால் உரிமம் ரத்து

*தமிழகத்தில் வாகன ஓட்டிகள் நாளை முதல் ஒரிஜினல் லைசென்சை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்திரவிட்டுள்ளது.

*இந்த உத்தரவு நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. இது ஒரிஜினல் லைசென்சை எப்போதும் உடன் வைத்திருப்பது சாத்தியம் இல்லை என்று தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது.

*இதனால் நாளை முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

*இதனை நாளை முதல் தீவிரமாக அமல்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாயம் என்கிற நடைமுறை வந்தது எப்படி என்பது பற்றி போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

*ஒவ்வொரு மாநிலத்திலும் விபத்து மரணங்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அடிக்கடி கூடி ஆய்வு செய்வார்கள்.

*அப்போது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றி செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகள் செல்வது போன்ற 6 விதி மீறல்களே உயிரிழப்புகளுக்கு கூடுதல் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டது.

*இதனையடுத்து இது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டியதுதானே என்கிற கேள்வியும் சுப்ரீம் கோர்ட்டில் எழுப்பப்பட்டது.

*இந்த பிரச்சனை பற்றி விவாதிக்கும் போது ஒரிஜினல் லைசென்சை யாரும் கையில் வைத்திருப்பது இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னரே ஒரிஜினல் லைசென்சை வாகன ஓட்டிகள் கையில் வைத்திருக்க வேண்டும் என வழிகாட்டுதல் குழு முடிவு செய்துள்ளது.

*இதன்படி நாளை முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஒரிஜினல் லைசென்சை கையில் வைத்திருக்க வேண்டும்.

*இந்த விதி மீறலில் ஈடுபடுவோரை மட்டுமே அதிகமாக சோதனை செய்து ஒரிஜினல் லைசென்சை கேட்போம். அதற்காக மற்றவர்களுக்கு விலக்கு எதுவும் கிடையாது. அனைவரும் ஒரிஜினல் லைசென்சை வைத்திருக்க வேண்டும்.

*இந்த விதி மீறல்களில் ஈடுபடுவோரின் லைசென்ஸ் குறைந்தது 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.