full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம்!!!!!

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட தயாரிப்பில், உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் “விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் இனிதே ஆரம்பம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை வெற்றிப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பகத் பாசில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.இந்நிலையில் படத்தின் டெஸ்ட் சூட்டை லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் களத்தில் மிகவும் பிசியாக இருந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது அரசியல் அலை ஓய்ந்ததையடுத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தவுள்ளார். அவரது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் எப்போது துவங்கும் என்பது இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அவர் தற்போது விக்ரம் படத்தின் சூட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளார்.

படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ள நிலையில், பிலோமின் ராஜ் எடிட்டிங்கிலும் அன்பறிவ் சண்டைக்காட்சிகளிலும் கவனம் செலுத்தவுள்ளனர். படத்தின் ஒவ்வொரு கலைஞரையும் லோகேஷ் பார்த்து பார்த்து தேர்வு செய்துவரும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.
இதனிடையே படத்தின் டெஸ்ட் சூட்டையும் லோகேஷ் கனகராஜ் சென்னையில் நடத்தி முடித்துள்ளார். இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொன்றிலும் அவர் வேகம் எடுத்து வரும் நிலையில், விரைவில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.