full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் நடைபெற்ற வைகை எக்ஸ்பிரஸ் டிரைலர் வெளியீட்டு விழா


மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும், அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..?

அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.,” உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதைவேண்டுமானாலும் சந்தைப்படுத்தி விடலாம். கற்றுக்கொடுப்பது தான் வாழ்க்கை. டேய் நான் உன் தகப்பன்டா என்று தந்தை கற்றுக் கொடுக்கிறார்… டேய் நான் உன் அம்மாடா சேலையைப் பிடிச்சு இழுக்கிற படவா என்று அம்மா கற்றுக்கொடுக்கிறாள்… நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என்று கற்றுக் கொடுத்தேன்… மக்கள் மதத்தைப் பற்றி பேசுவார்கள், அரசியலைப்பற்றிப் பேசுவார்கள், சினிமாவைப் பற்றி வெறுமனே பேசாமல் நேசிக்கவும் செய்கிறார்கள்…

பலகோடி வர்த்தகம் நடக்கும் இடம். பல லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடம். ஆனால், நசிந்து கிடக்கிறது. 300 ரூபாய்க்கு விற்கும் டிக்கெட்டை எடுத்துப் படம் பார்த்துட்டு, குடும்பத்தைக் கூட்டிட்டுப் போக முடியலயே என்கிற ஆதங்கத்தில்., இல்லை படம் மொக்கை என்று  நண்பன் சொல்லிட்டான் என்று பொய் சொல்கிறான்… 600 பேர் அமரும் தியேட்டரில் 100 டிக்கெட் கூட விற்கமாட்டேங்குது… நான் 300 ரூ டிக்கெட்டை 100 ரூபாய்க்கு கொடுக்கிறேன். அத்துடன் 3 பேர் டிக்கெட்டு எடுத்தா 2 பேரைக் இலவசமா கூட்டிட்டு வா என்கிறேன்… குடும்பம் குட்டியோட மக்கள் சந்தோஷமா படம் பார்க்கட்டுமே…

அப்படி உருவானதுதான் ஹிட் பாக்ஸ்… இது பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுக்கான உத்திரவாதமான முதல் படி… ஆயிரம் வி நியோகஸ்தர்களை உருவாக்கினேன்…ஐயா திருட்டு விசிடி விக்கிறாய்ங்கன்னு சொன்னார்கள்.. இது இனிமேல் உங்கள் சினிமா உங்கள் வியாபாரம் என்று ஊக்கப்படுத்தினேன்.. களமிறங்கி ஜெயித்திருக்கிறார்கள்…

ஆன் லைன்ல புக் பண்ணா எவனோ ஒருத்தன் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூ சம்பாதிக்கிறான்…கேட்டா சர்வீஸ் சார்ஜுங்கிறான்… 10 டிக்கெட் புக் பண்ணாலும் 300 ரூபாய் வாங்கிவிடுகிறான்… இதை முதலில் ஒழிக்கவேண்டும்…

எங்க ஹிட் பாக்ஸ்ல டிக்கெட் விற்கிறவர்கள் ஒரு டிக்கெட்டுக்கு 5 ரூபாய்தான் வாங்குகிறார்கள். 1 லட்சம் டிக்கெட் விற்றால் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பார்கள்…. என் எழைத்தமிழனும் லட்சாதிபதி ஆகட்டுமே…

ஹிட் பாக்ஸ் மூலமா எட்டு கோடி பேரும் தியேட்டர்ல வந்து படம் பார்ப்பார்கள்…

வைகை எக்ஸ்பிரஸ், தொடர்ந்து நான்கு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடும்…

ஹிட் பாக்ஸ் வி நியோகம் உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ் சினிமாவுக்கு வைகை எக்ஸ்பிரஸ் மூலம் வருகிறது… எதிர் காலத்தில் எங்கள் படங்களையும் ஹிட் பாக்ஸ் மூலம் வி நியோகியுங்கள் என்று எல்லோரும் வருவார்கள்..” என்றார்.
ஷாஜி கைலாஷ் இயக்கியிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார், ராஜ ரத்தினம்  ஒளிப்பதிவு செய்ய , சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கிறார் கனல் கண்ணன். வசனத்தை கையாண்டிருக்கிறார்
V. பிரபாகர்.

ஆர் கே, நீதுசந்திரா, இனியா, கோமல் சர்மா, சுஜா வாருணி, நாசர், ரமேஷ் கண்ணா, எம் எஸ் பாஸ்கர், மனோபாலா, ஸ்ரீரஞ்சனி, காமெடி டைம் அர்ச்சனா,  பவன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் கேயார், ஏஎம் ரத்னம், ஏஎல் அழகப்பன், கதிரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *