சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்துள்ள ‘2.0’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தை முதலில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ரஜினியின் மருமகனாகிய நடிகர் தனுஷ் தயாரித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிட முடிவு செய்து, ஏப்ரல் 27-ந் தேதி திரையிடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருவதால் கடந்த ஒரு மாத காலமாக புதிய படங்கள் எதுவும் ரிலீசாகவில்லை. படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ரைக் முடிந்ததும், ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் தணிக்கை பெற்ற தேதியை வைத்து ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலா ரிலீஸ் மேலும் தள்ளிப் போவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.
காலா படத்திற்கு தணிக்கை வாரியம் “யு/ஏ” சான்றிதழ் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மொத்தம் 14 இடங்களில் கத்தரி போடப்பட்டுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த காட்சிகள் அனைத்தும் மிக முக்கியமான காட்சிகள் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தியாவில் தற்போதிருக்கும் சூழலில் வெளியில் அரசியல் பேசுவதற்கே படாதபாடு படும் போது, திரையில் அரசியல் பேசினால் சும்ம விடுவார்களா என்ன?? அதுவும் ரஞ்சித் பேசும் அரசியலுக்கு கேட்கவா வேண்டும்??