நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில், இயக்குநர் பாண்டியன் ஆதிமூலம் இயக்கத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகர் மகன் ஹர்ஷ வர்தன் U அறிமுகமாகும் புதிய திரைப்படம் !

cinema news
0
(0)
நடிகர் சிபி சத்யராஜ், தனது திரைப்பயணத்தில் தனித்தன்மை மிக்க, சிறந்த  உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து  நடிப்பதன் மூலம், தொடர்ந்து சிறந்த வெற்றிப்படங்களை வழங்கி, வர்த்தக வட்டாரங்களில் மிக நம்பிக்கையான நாயகனாக வலம் வருகிறார். இந்த அம்சங்கள் பொது பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடையே திரைப்படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. அவரது அடுத்தடுத்த திரைப்பட வரிசைகள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதோ தற்போது இன்னும் ஆர்வத்தை தூண்டும் வகையில், அவரது புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.
Will Sibi Sathyaraj Ever Make It Out Of His Father's Shadow? - Varnam MY
இது நடிகர்  சிபி சத்யராஜின் 20வது படம். இப்படத்தை Big Print Pictures சார்பில்  IB கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்குகிறார். , இது மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கதைக்கருவுடன்  இப்படம் உருவாகிறது. இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் கதாநாயகனுக்கும் எதிரிக்கும் இடையே ஆடு புலி ஆட்டமாக பரபரப்பான ஆக்சன் அதிரடி திரில்லர் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன்  U இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாவது, இந்தப் படத்தின் மீது  பெரும் ஈர்ப்பையும் ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது.
படம் குறித்து இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன்  U  கூறியதாவது..,
நான் கடந்த 5 வருடங்களாக தென்னிந்தியத்  இசைத்துறையில் பணியாற்றி வருகிறேன். வித்யாசாகர் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், ஜி.வி.பிரகாஷ், தமன் சார் மற்றும் பலருக்கு கீபோர்டு புரோகிராமராக இருந்திருக்கிறேன். இசையமைப்பாளராக இது எனது முதல் படம் என்பதில், நான் மிக  உற்சாகமாக இருக்கிறேன். இப்படத்தின் திரைக்கதையை கேட்டபோது, பின்னணி இசைக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன், அது இப்படத்தை ஒரு சிறந்த படைப்பாக  கொண்டு வர வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். நான் முன்பே இந்த வகைத் திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன், ஆனால் மற்ற இசையமைப்பாளர்களின் கீழ் தான் நான் பணியாற்றியிருக்கிறேன், இப்போது தான்  முதல்முறையாக இசையமைக்கும் வாய்ப்பு  எனக்கு  கிடைத்துள்ளது. படத்தில் ஒன்றிரண்டு பாடல்கள் உள்ளன, விரைவில் அதற்கான ரெக்கார்டிங் பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. இந்த திரைப்படத்தில் பணியாற்றும்  வாய்ப்பை தந்த தயாரிப்பாளர்  IB கார்த்திகேயன் சார் மற்றும் இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் ஆகியோருக்கு நன்றி.
இந்தப் படத்திற்கு பிரவீன் குமார் (ஜிவி, கிளாப் மற்றும் ஹாஸ்டல் படப்புகழ்) ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.அறிமுக இயக்குநரான பாண்டியன் ஆதிமூலம், எஃப்எம், டிவி ரியாலிட்டி ஷோக்கள், டிவி தொடர்கள் மற்றும் திரைப்படத் துறையில் என கடந்த   பத்தாண்டுகளாக ஊடக உலகில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது, விரைவில் தொடங்கப்படும் ஓடிடி  தொடர் ஒன்றுக்கு வசனங்களையும் திரைக்கதையையும்  எழுதியுள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.