மோகன்பாபு படம் வெற்றி பெற இளையராஜா வாழ்த்து..!

cinema news
மோகன் பாபுவின் ‘சன் ஆஃப் இந்தியா’ படம் வெற்றி பெற இளையராஜா வாழ்த்து மோகன் பாபு நடிப்பில்  உருவாகியுள்ள ‘சன் ஆஃப் இந்தியா’ படம் வெற்றி பெற இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மோகன் பாபு சிறந்த நடிகர் மட்டும் அல்ல சிறந்த மனிதர் ஆவார். அவரது சன் ஆஃப் இந்தியா படத்தை என் படம் போல் எண்ணி தான் அதில் பணியாற்றினேன்.
படம் மிக சிறப்பாக வந்துள்ளது. 18 ஆம் தேதி வெளியாக உள்ள சன் ஆஃப் இந்தியா படம் மிகப்பெரிய வெற்று பெற வேண்டும். தயாரிப்பாளர்கள் லக்‌ஷ்மி மஞ்சு மற்றும் விஷ்ணு மஞ்சு இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ சவ்ன் ஆஃப் இந்தியா’ வரும்  பிப்ரவரி 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது