வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” பிரமாண்ட பொருட்செலவில் FANTASY COMEDYஆக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் முதல் கட்டமாக சென்னையில் தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்று முடிந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் Rainbow குழுவினர் இயக்குனர் மற்றும் நடிகருமான திரைக்கதை மன்னன் K.பாக்யராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.
இப்படத்தில் “BIGBOSS” புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது.
இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் ,மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க மற்றும் மைம் கோபி , மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள்.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் S. P. ஹோசிமின். பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர்.இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro, மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் “சுமோ” விரைவில் வெளியாக உள்ளது.
படத்தின் இயக்குனர் S. P. ஹோசிமின் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் இந்த படத்தை இயக்குகிறார், ஒளிப்பதிவாளர் வினோத் குமார், இசையமைப்பாளர் சுபாஷ் ஆனந்த், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கூட்டணியில் படப்பிடிப்பு தொடர்கிறது குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக உருவாகிறது