full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

`2.0′ படத்தின் புரமோஷன் திருவிழா

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். லைக்கா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் ரூ.400 கோடியில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கி இருக்கிறது. `2.0′ பட புரமோஷனுக்காக ஒரு உலக சுற்றுலா மேற்கொள்ள இருப்பதாக ராஜு மகாலிங்கம் அறிவித்திருந்தார். அதன்படி `2.0′ பட விளம்பரங்கள் இருக்கும் பலூன்களை சுமார் 100 அடி உயரத்தில் பறக்கவிட்டனர்.

இந்நிலையில், `2.0′ படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் குறித்த அறிவிப்பையும் படத்தின் தயாரிப்பாளரான ராஜு மகாலிங்கம் வெளியிட்டிருக்கிறார். அதன்படி `2.0′ படத்தின் புரமோஷனுக்காக படக்குழு அமெரிக்கா செல்ல இருக்கிறது.

ஜுலை மாதம் 28 – 30 தேதிகளில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் சீசர் திருவிழா (QucikChek Festival) நடத்த உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.