full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அதிரும் 2.0 அப்டேட்ஸ்!!

இயக்குனர் சங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள எந்திரன் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதற்காக தனி ஹெலிகாப்டர் மூலமாக ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் விழா நடக்கவிருக்கும் “புர்ஜ் கலீஃபா” அரங்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.

முன்னதாக உலக அளவிளான பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி, சங்கர், ரகுமான் ஆகியோர் பேசினார்கள்.

முதலில் பேசிய ரஜினி, “நிஜ வாழ்வில் நடிப்பதற்கு யரும் எனக்கு காசு தருவதில்லை. எனவே நான் நிஜ வாழ்வில் நடிப்பதில்லை” என்று கூறினார்.

அடுத்து பேசிய இயக்குனர் சங்கர், “எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக 2.0 எடுக்கப்படவில்லை. எந்தப் படத்தையும் தழுவியும் எடுக்கப்படவில்லை. நிச்சயமாக 2.0 உலக அளவில் பேசப்படும் படமாக இருக்கும்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், “ 2.0 படத்தில் மொத்தம் முன்று பாடல்கள் வைத்திருக்கிறோம். முதலில் இரண்டு பாடல்களை மட்டுமே நாளை வெளியிட உள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில் இந்தியாவின் மிக அதிகமான பட்ஜெட் படமாக உருவாகியுள்ள 2.0 திரைப்படத்தின் இசை வெளியீடும், உலகமே வியக்கும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.