full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கொம்பு வச்ச சிங்கம்டா-MOVIE REVIEW

கரூர் மாவட்டத்தில் உள்ள ஊரில் செல்வாக்குடன் இருக்கிறார் மகேந்திரன். இவரது ஒரே மகன் சசிகுமார் சமத்துவம், சகோதரத்துவம் என்று ஊரை மாற்ற நினைக்கிறார். இதனால் ஊருக்குள் இருக்கும் பல பேரின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. இந்நிலையில் ஊரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் இரு பெரும் கோஷ்டிகள் மோதுகின்றன. அதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. இந்தக் கொலை வழக்கில் சசிகுமார், சூரி உள்ளிட்ட மூன்று பேர் கைதாகிறார்கள். நண்பர்களுக்குள் உருவான பிரச்சினை ஊர்ப் பிரச்சினையாகவும், சாதிப் பிரச்சினையாகவும் உருமாறுகிறது.இறுதியில் இந்த பிரச்சனைகளை சசிகுமார் எப்படி சமாளித்தார்? கொலையானது யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார், தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளில் செயற்கையான நடிப்பு தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டியனுக்கு பெரியதாக வேலை இல்லை. பாடல் காட்சிகளில் மட்டும் வந்து சென்றிருக்கிறார்.அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் மகேந்திரன். இந்தர் குமார், ஹரீஷ் பெராடி ஆகியோரின் நடிப்பு கவனிக்க வைத்து இருக்கிறது. சூரியின் காமெடி பெரியதாக எடுபடவில்லை. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். 
‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். கமர்ஷியல் படத்திற்கு உண்டான அம்சங்களை கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார். ஆனால், பெரியதாக ரசிகர்களை கவரவில்லை.என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. திபு நினன் தாமஸ் இசையில் பாடல்களை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.