full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

Amazon Original தொடரின் புத்தம் புது காலை விடியாதா… இசைத் தொகுப்பில் GV . பிரகாஷ் குமாரின் டைட்டில் டிராக்கை IIT சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் உருவாக்கினர்

Amazon Prime Video சமீபத்தில் பல இசையமைப்பாளர்கள் பங்கேற்ற புத்தம் புது காலை விடியாதா… இசைச் தொகுப்பின் ஒலிப்பதிவை அறிவித்தது, இது ஸ்ட்ரீமிங் சேவையில் ஜனவரி 14 அன்று வெளியிடப்படுகிறது.  பாடல்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில் இந்த ஆல்பம் குறித்து இசை ஆர்வலர்கள் பாராட்டைப் பொழியத் துவங்கியுள்ளனர். குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய ‘புத்தம் புதுக் காலை விடியாதா…’ பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது
ஒரிஜனல் பாடலை இங்கே காணவும்:

 

சமீபத்தில், இப்பன்முகத் திறமை கொண்ட கலைஞர், IIT  மெட்ராஸின் ஆண்டு விழாவான சாரங்கில் மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் உரையாடி, டைட்டில் டிராக் உருவாகிய விதம் மற்றும் அவரது இசை உலகப் பயணம் குறித்து கலந்துரையாடினார். உரையாடலின் முடிவில், IIT  மெட்ராஸின் மியூசிக் கிளப் மாணவர்கள், Amazon Original தொடரின் டைட்டில் டிராக்கின் கவர் பதிப்புடன் ஜிவி பிரகாஷை ஆச்சரியப்படுத்தினர்.
IIT  மெட்ராஸ் இசை மாணவர்களின் கவர் பதிப்பை இங்கே காணலாம்: https://www.instagram.com/tv/CYg-b8dle3E/?utm_source=ig_web_copy_link

மாணவர்கள்-பதிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஜி.வி.பிரகாஷ் குமார், “பாடலின் மறுவடிவமைப்பு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது மிகவும் சிறப்பாக வழங்கப்பட்டது மற்றும் இசையமைப்பு மிகவும் அழகாகவும், மிகவும் தொழில்முறையாகவும் இருந்தது. பாடலில் கிட்டார் டிராக் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடலை நானே ப்ரோக்ராம் செய்தது போன்ற எண்ணத்தை எனக்கு வழங்கியது” என்கிறார்.இந்த டைட்டில் டிராக் மூலம், ஜி.வி. பிரகாஷ் குமார் Amazon Original உடன் தனது வெற்றிகரமான உறவைத் தொடர்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஜிவி, முன்னர் ‘புத்தம் புதுக் காலை’க்கான தலைப்புப் பாடலை உருவாக்கி, இப்போது வெற்றிகரமான தமிழ்த் தொகுப்பின் இரண்டாம் பதிப்பான ‘புத்தம் புதுக் காலை விடியாதா’ என்ற தொகுப்புக்கு தலைப்புப் பாடலைப் பாடி இசையமைத்துள்ளார். கேபர் வாசுகி எழுதிய இந்தப் பாடலில் யாமினி கண்டசாலாவும் பாடியுள்ளார்.
புத்தம் புதுக் காலை விடியாதாவில் உள்ள ஒவ்வொரு கதையும் தனித்தனியாக இருந்தாலும், நம்பிக்கையின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் மனித உறவு மூலம் புதிய தொடக்கங்கள் என்ற கருப்பொருளால் அவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனில் அமைக்கப்பட்ட இக்கதைகள், காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்துப் பேசுகின்றன.  ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலிப் சுப்பராயன், கௌரி ஜி கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்ய கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.புத்தம் புதுக் காலை விடியாதா… வரும் பொங்கல், ஜனவரி 14, 2022 அன்று  Amazon Prime Video-இல்  ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் மற்றும் அன்பை விளக்கும் இதயத்தைத் தூண்டும் இக்கதைகளைப் பாருங்கள்.