ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 19, 2022 முதல், இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
இப்படத்தில் பல அற்புதமான புதுமையான முயற்சிகள் நிகழ்த்தப்பட்டிருந்தது, அவற்றில் அருண் விஜய் நிகழ்த்திய சிங்கிள்-ஷாட் ஆக்ஷன் சீக்வென்ஸ் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்பைப் பெற்றது. தவிர, இயக்குனர் ஹரியின் வலுவான கம்பேக்கிற்காக “ யானை” பாராட்டை பெற்றது குறிப்பிடதக்கது. பொதுவாக இயக்குநர் ஹரி தன் திரைப்படங்களில் ஆக்ஷன், உணர்வுகள், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப அம்சங்களை சரியான கலவையுடன் தந்து, பார்வையாளர்களின் நாடித் துடிப்புக்கு ஏற்ப பொழுது போக்கை வழங்குவதில் பாராட்டைப் பெறுபவர். மேலும் இப்படத்தில், ஜீவி பிரகாஷ் குமாரின் இசையமைப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒட்டு மொத்த நட்சத்திர நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு கதைக்கு மேலுமொரு பேரலங்காரமாக அமைந்திருந்தது.