full screen background image
Search
Thursday 5 December 2024
  • :
  • :
Latest Update

ஈட்டி, ஐங்கரன் திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈட்டி, ஐங்கரன் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் ரவிஅரசுவுக்கு பிறந்த தினத்தை ஒட்டி திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் 2015-ல் வெளியாகிய திரைப்படம் ஈட்டி. வசூல்  ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  ஒரு சவாலான தடகள சாம்பியனின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் அழுத்தமாகவும் ஜனரஞ்சகமாகவும் அளித்திருந்தார் இயக்குனர் ரவிஅரசு. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.தனது இயக்கத்தில் இரண்டாவது படமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ஐங்கரன் படத்தை இயக்குநர் ரவிஅரசு இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்களும் டிரைலரும் பலரின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஐங்கரன் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.இயக்குநர் ரவிஅரசு இன்று (ஜனவரி 23-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் பிறந்த தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இதனிடையே இயக்குநர் ரவிஅரசுவின் அடுத்த திரைப்படம் குறித்த அசத்தலான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அந்த திரைப்படம் அனைத்து தரப்பினரும் விரும்பும் வகையிலான மாறுபட்ட கதைக்களத்தில் இருக்கும் என்று இயக்குனர் ரவிஅரசு தெரிவித்துள்ளார்.