full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

50ரூபாய் மதிப்புள்ள சாப்பாட்டை 10ரூபாய்க்கு வழங்கும் கார்த்தி மக்கள் நல மன்றம்.

கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலகம் வாசலில் ஒரு வண்டிக் கடை உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ரூ50 மதிப்புள்ள தரமான, சுவையான பிரிஞ்சி சாதம் (வெஜிடபிள் பிரியாணி) ரூ 10 க்கு வழங்கப்பட்டு வருகிறது.கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி சுத்தமான முறையில் கடந்த 150 நாட்களுக்கும் மேலாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது.தினசரி சராசரியாக100 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள்; குறிப்பாக ஊருக்கே உணவு சப்ளை செய்யும் ஸ்விக்கி, ஜூமோட்டோ டெலிவரி பாய்கள் போன்றோர் இந்த உணவகத்தில் தினசரி உணவு உட்கொள்கிறார்கள்.

லாப நோக்கம் எதுவுமின்றி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் திரு. கார்த்தி அவர்களின் ஆதரவுடனும் வழிகாட்டுதலுடனும் இந்த உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தினசரி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை இந்த உணவகம் செயல்படுகிறது.