ஒரு திரைப்படத்தை மிகவும் உண்மையாக அல்லது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கச் செய்வது அதன் ‘கதாப்பாத்திரங்கள்’ தான். பார்வையாளர்கள் திரையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்வை பிரதிபலிப்பதாகவோ அல்லது அந்த பாத்திரங்களோடு தங்களை தொடர்புபடுத்தி கொள்ளவோ முடிந்தால், அந்தப்படம் அங்கேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடும். அந்த வகையில் ஜனவரி 13, 2022 அன்று, உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும், Trident Arts தயாரிப்பாளர் R.ரவீந்திரனின் தயாரிப்பில் வரவுள்ள திரைப்படமான “என்ன சொல்ல போகிறாய்” அனைத்து தரப்பு பார்வையாளர்களும் ரசிக்கக்கூடிய அழகான, ஆழமான கதாபாத்திரங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எளிமையான வார்த்தைகளில் சொல்வதென்றால், இடைவிடாத பொழுதுபோக்கு தருவதால், ஒரு ரெடியோ ஜாக்கி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடும்ப உறுப்பினராக ஆகிவிடுவார்…. அஷ்வின் குமார் லக்ஷ்மிகாந்தன் இந்தக் கேரக்டருக்கு கச்சிதமாக இருப்பார் என்று நினைத்தேன் தமிழ் மொழியை லாவகமாக கையாண்டு இந்தக்கதாப்பாத்திரத்தை அவர் அழகுபடுத்தியதற்கு நன்றி. அவர் ஒரு தமிழ் பேசும் ஹீரோ தான் என்றாலும், ஒரு ரேடியோ ஜாக்கியின் திறமையான மொழி வழக்கை பின்பற்றி பேசுவெதென்பது, நாம் நினைப்பது போல் அத்தனை எளிதானது அல்ல, ஆனால் அதை அவர் எளிதில் சாதித்தார். அவர் இந்த பாத்திரத்திற்குள் தன்னை நுழைத்து கொண்டு தன் அனைத்து திறமையையும் தந்து, இந்த பாத்திரத்தை சிறப்பாக செய்து காட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார் இயக்குநர் ஹரிஹரன். இப்படத்தில் ரேடியோ மிர்ச்சி எப் ஃஎம்மில் வேலை செய்யும் விக்ரம் எனும் ரேடியோ ஜாக்கியாக வருகிறார் அஷ்வின், அவரது நெருங்கிய நண்பர் சிட்டி உடன் ஊர் சுற்ற விரும்பும் மாடர்ன் இளைஞராக நடித்திருக்கிறார். விஜய் டிவி மூலம் புகழ்பெற்ற நடிகர் புகழ் ‘சிட்டி’ பாத்திரத்தை செய்துள்ளார். அவரது பாத்திரத்தை குறித்து இயக்குனர் ஹரிஹரன் கூறும்போது… புகழுக்காக ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளேன். “ஆமாம், சென்னை நகரின் மையப்பகுதியில் பப் நடத்தும் சிட்டி என்ற கதாபாத்திரத்தில் புகழ் நடிக்கிறார். பார்ட்டி செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு பப் ஒரு கொண்டாட்ட தளமாக இருக்கும். ஆனால் அதை நடத்தும் ஓனருக்கு அதை நடத்துவதில் பல சவால்கள் இருக்கும். சிட்டி பாத்திரமும் அப்படித்தான். ஆனால் தன் நண்பன் விக்ரமுடன் எந்த நேரத்திலும் சந்தோஷமாக இணைந்து சுற்ற விரும்பும் உயிர்தோழனாக நடித்திருக்கிறார்.
அனைவரையும் கவரும் வகையிலான பெண் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் திறமை கொண்ட இயக்குனர் ஹரிஹரன் இப்படத்தின் பெண் கதாப்பாத்திரங்கள் குறித்து கூறும்போது.., “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் திரைக்கதையை எழுத ஆரம்பித்தபோதே, பெண் கதாபாத்திரங்களை அழுத்தமான வகையிலும், அழகாக சித்தரிக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். குறிப்பாக, ஒரு காதல் படத்திற்கு பெண் கதாபாத்திரங்கள் வலுவாகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். அவந்திகா மிஸ்ரா ஒரு பிரபலமான எழுத்தாளர் அஞ்சலியாக நடிக்கிறார், அவர் காதல் கதைகளை எழுதுவதில் அடிமையாகி, மிகவும் தீவிரமான, காதல் மீது பற்று கொண்ட நபராக இருக்கிறார். காதல் தான் அவருக்கு எல்லாமே. தேஜு அஸ்வினி ப்ரீத்தி என்ற நாடகக் கலைஞராகவும், நடிகையாக சிறந்து விளங்க விரும்பும் லட்சியப் பெண்ணாகவும் நடித்துள்ளார். அவள் இளைய சகோதரன் மற்றும் தாத்தாவுடன் வாழ்கிறார். இந்த இரண்டு பெண் கதாபாத்திரங்களும் வாழ்க்கை, காதல் மற்றும் உறவுகளைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் பார்வையாளர்கள் இந்த கதாபாத்திரங்களுடன் ஏதோ ஒரு வகையில் இணைந்திருப்பதை நிச்சயம் உணருவார்கள்.
ஜனவரி 13, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ரோம்- காம் திரைப்படமான “என்ன சொல்ல போகிறாய்” படத்தை இயக்குநர் ஹரிஹரன் A இயக்கியுள்ளார். Trident Arts தயாரிப்பாளர் R.ரவீந்திரனின் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஷ்வின் குமார் லட்சுமிகாந்தன், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக்-மெர்வின் பாடல்கள் ஏற்கனவே சார்ட்பஸ்டர்ஸ் ஹிட் ஆகியுள்ளது, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெருமளவில் அதிகரித்துள்ளது.