full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

Studio Green தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா வழங்கும், பிரபுதேவா நடிப்பில், ஹரிகுமார் இயக்கத்தில் “தேள்” திரைப்படம், பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி14, 2022 வெளியாகிறது !

குடும்பங்களோடு கொண்டாடும் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கிய Studio Green தயாரிப்பாளார் K.E.ஞானவேல்ராஜா, தனது நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ‘தேள்’ திரைப்படத்தை  பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி14,2022 வெளியிடுகிறார். இயக்குநர் ஹரிக்குமார்  எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
 
பொங்கல் பண்டிகையில், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள் வெளியாவது ஒரு வெற்றிகரமான அம்சமாக கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் ஒன்று கூடி, கொண்டாடும் விழா கோலத்தின் ஒரு பகுதியாக புதிய திரைப்பட வெளியீடுகளும் அமைந்திருக்கும். குறிப்பாக, இந்த விழாக்காலத்தில் திரைப்படங்களுக்கு குடும்ப பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், இது பல ஆண்டுகளாக வெற்றிகரமான பொங்கல்  வெற்றி திரைப்படங்கள் மூலம் தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளது. அந்த வகையில் ஒரு விழாக்கால கொண்டாட்டமாக, குடும்ப உறவுகள், உணர்வுபூர்வ கதை, நகைச்சுவை, ஆக்‌ஷன் நல்ல இசை மற்றும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ‘தேள்’ திரைப்படம், குடும்ப பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விருந்தாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் உறுதியாக நம்புகிறது.
 
இயக்குநர் ஹரிக்குமார்  எழுதி இயக்கியுள்ள  இத்திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா, நடிகை சம்யுக்தா ஹெக்டே  முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் ஈஸ்வரி ராவ், யோகிபாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
 
 
C.சத்யா (இசை), விக்னேஷ் வாசு (ஒளிப்பதிவு), பிரவீன் KL (எடிட்டிங்), பொன் பார்த்திபன் (வசனம்), அன்பறிவு (ஸ்டண்ட்ஸ்), செந்தில் ராகவன் (கலை), ஜானி-விஜி சதீஷ் (நடன அமைப்பு), ஜெயலக்‌ஷ்மி (ஆடை வடிவமைப்பாளர்), ரமேஷ் ( காஸ்ட்யூம்), நாகராஜ் (மேக்கப்), பிரேம் (SFX), Accel Media (DI), அசோக் (VFX) ஆகியோர் இந்தப் படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.