கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள சந்தனபள்ளி பஞ்சாயத்து பெரிய பூதுக்கோட்டை பகுதியில் 65 வீடுகள் உள்ளன,ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த ராதிகா , அவருடைய தந்தை painter தொழில் செய்து வருபவர் அவரின் தாய் கூலி வேலை செய்து வருகிறார்,
இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இதில் ராதிகா இரண்டு குழந்தை,பெரிய பூதுக்கோட்டை கிராமத்தில் அரசு சார்ந்து எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும், யானை நடமாடும் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், தினந்தோறும் நடந்து வந்து தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வந்து +2 வகுப்பில் 478/600 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதல் நபராக வந்துள்ளார்,
தொடர்ந்து 4 அரை ஆண்டாக நீலம் பண்பாட்டு மையம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளியின் நீலம் இரவு பாடசாலை மாணவர்காக இருந்து மாலை நேரம் மற்றும் காலை படித்து இன்று அப்பகுதிக்கு மட்டுமில்லாமல் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார், கடந்த மூன்று மாதத்திற்கு மூன்பு இயக்குனர் பா இரஞ்சித் அவர்கள் பெரிய பூதுக்கோட்டை நீலம் இரவு பாடசாலைக்கு வருகை தந்த அனைவரையும் பாராட்டினார் மேலும் சமூக கல்வி சமூக அரசியலை கற்பிக்க
நம் அனைவரும் இப்பள்ளியின் மூலம் மேம்படுத்தலாம் என்று மக்களிடம் தெரிவித்தார்,
தொடர்ந்து டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கீழ் இயங்குகிற திருப்பூர் சட்ட கல்லூரிக்கு தேர்வு செய்ய பட்டுள்ளார் சகோதரி ராதிகா,அவரின் விட முயற்சி தலைமுறைகளுக்கு பாடம்!!!
குறிப்பு:
இவரின் பகுதிக்கு தார் சாலை அமைக்கவும், சுடுகாடு அமைக்கவும் 10 ஆண்டுகால கோரிக்கை வைத்து வருகிறார்கள்,