கமலுக்குக் கிடைத்த பெருமைகள் நடிகா் ஸ்ரீராமுக்கும் கிடைத்து வருகின்றன!

cinema news

குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்றது , சிறுவயதிலேயே தேசிய விருது வாங்கியது, மலையாளத்தில் முதல் படத்திலேயே நேரடி கதாநாயகன் ஆனது இப்படிப்பட்ட பெருமைகள் உலகநாயகன் கமல்ஹாசனின் வாழ்க்கையில்தான் வாய்த்துள்ளன. அவரது பரம ரசிகனான ஒரு நடிகருக்கும் அதே பெருமை வந்துள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து பலரும் பாராட்டுகிறார்கள்.அந்த நடிகர் தான் ஸ்ரீராம். இவரும் ‘பசங்க ‘படத்தின் மூலம் 2009-ல் தேசிய விருதை வென்றார்.அண்மையில்  ஓடிடி தளத்தில் வெளிவந்த ‘நவரசா’ படத்தில் இடம்பெறும் ‘ரௌத்திரம் ‘ நாயகனாக முத்திரை பதித்தார்.

Sree Raam (Navarasa) Wiki, Biography, Age, Family, Movies, Images - News Bugz

அந்த ஸ்ரீராம் மலையாளத்தில் இப்போது நேரடியாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு இப்படி மலையாளத்தில் நேரடி கதாநாயகனாக  அறிமுகமானவர் கமல்ஹாசன் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அபிமான நட்சத்திரத்தின் அடிச்சுவட்டில் பயணம் செய்வதில் பெருமைப்படுகிறார் ஸ்ரீராம்.ப்ளூம் இண்டர்நேஷனல்(Bloom International) என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வேணு கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில் ‘எக்ஸிட் ‘( EXIT) எனப் பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் மலையாளத்தில் தனி நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார் . புதுமுக இயக்குநர் ஷாகீன் படத்தை இயக்கி வருகிறார்.கடந்த ஜனவரி 15 ஆம்தேதி தைப்பொங்கல் முதல்  கேரளாவின் குட்டிக்கணம் மலைப்பகுதியிலும்  பாலக்காட்டிலும் தொடர்ந்து இரவு பகலாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

Sree Raam (Navarasa) Wiki, Biography, Age, Family, Movies, Images - News Bugz

படபிடிப்பு   தொடங்கிய சில நாட்களிலேயே ஸ்ரீ ராமின்  தனது கதாபாத்திரத்துக்கான மெனக்கெடலைக் கண்டு வியந்த தயாரிப்பாளர் , மற்றும் இயக்குநர்  , ‘எக்ஸிட்’ திரைப்படத்தை… ஒரே நேரத்தில் மலையாளம் மட்டுமல்லாது, தமிழிலும் தயாரிக்க முடிவு செய்துவிட்டனர். திட்டமிட்ட 45நாள் படப்பிடிப்பில் தற்போது 25 நாட்கள் முடிந்த நிலையில் மீதம் உள்ள நாட்களையும் ஒரே ஷெட்யூலாக  படப்பிடிப்பு நடத்தி முடிக்க முடிவு செய்து இடைவிடாது  தொடர்ந்து படபிடிப்பு நடந்து வருகிறது.வளர்ந்து வரும் தமிழ் நடிகர் ஒருவருக்கு வெளிப்புறப் படபிடிப்புத் தளத்தில் கேரள மாநிலத்தின் மக்கள் கொடுக்கும் வரவேற்பைக் கண்டு அந்தப் படத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.

Paisa Movie Wallpapers, Posters & Stills

ஸ்ரீராமின் தந்தை சிவ.ராமகிருஷ்ணா மலையாளத் திரைப்பட உலகில் மறைந்த பிரபல திரைப்பட  இயக்குநர் ஐ.வி.சசியிடம் உதவி இயக்குநராக மோகன்லால் மீனா நடிப்பில் வர்ணப்பகிட்டு,  குஷ்பு, சுரேஷ்கோபி நடிப்பில் அனுபூதி போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.மேலும் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் வெளிவந்த “பாபநாசம்” திரைப்படத்தில் கமலின் உதவியாளராக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இப்படித் தந்தையின் மலையாளப் பரிச்சயத்தால் ஸ்ரீராமினால்  சரளமாக மலையாளம்  பேச முடிகிறது.”நவரசா”வில்  … நடிகர் அரவிந்த்சாமி இயக்கத்தில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த “ரௌத்திரம்” என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீ ராமை வைத்து தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜய்  “Zee 5″ற்காக புதிய வெப்சீரிஸ் ஒன்றைத் தனது வழக்கமான பாணியில்  பெரிய அரங்குகள் அமைத்து பெரும் பொருட்செலவில் தயாரித்து இயக்கியுள்ளார்.’டான்சிங் டீன்ஸ்'(Dancing Teen’s)எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வெப்சீரிஸ் நடிகர்  ஸ்ரீ ராமிற்கு மீண்டும் ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வெப்சீரிஸில் “லட்சுமி” படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தியா பாண்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் வெப் சீரிஸில் மட்டுமல்ல மேலும் 2 புதிய படங்களிலும் நடிக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாக  நடிக்கிறார். இப்படி ஸ்ரீராமின் முன் புதிய புதிய வாய்ப்பு வாசல்களைத் திறந்து கொண்டே இருக்கின்றன இந்த 2022 அவருக்குப் புதிய வெளிச்சத்தைத் தேடித் தரும் என்று நம்புகிறார்.