full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கூர்மன்-MOVIE REVIEW

செங்கல்பட்டில் உள்ள பண்ணை வீட்டில் வாழ்ந்து வருகிறார் நாயகன் ராஜாஜி. போலீஸ் வேலையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவருக்கு, ஒருவர் மனதில் நினைப்பதை சொல்லும் திறமை கொண்டவர்.இவரின் திறமையை தனக்கு சாதகமாக்கி வருகிறார் போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன். அப்படி ஒரு குற்றவாளியை விசாரிக்க ராஜாஜி பண்ணை வீட்டுக்கு அனுப்புகிறார் ஆடுகளம் நரேன். அந்தக் குற்றவாளி ராஜாஜியின் பண்ணை வீட்டிலிருந்து தப்பிக்கிறார். இதனால் கோபமடையும் ஆடுகளம் நரேன், குற்றவாளியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று ராஜாஜிக்கு கட்டளையிடுகிறார்.இறுதியில் ராஜாஜி தப்பிச்சென்ற குற்றவாளியை கண்டுபிடித்தாரா? போலீஸ் வேலையில் இருந்து ராஜாஜி சஸ்பெண்ட் செய்ய என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, கோபம், காதல், பாசம், ஆக்ரோஷம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். வசனங்கள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக வரும் பிரவீன், நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் ஜனனி, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பால சரவணன், ஆடுகளம் நரேன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது. சுப்பு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாய் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.
வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரயான் பி ஜார்ஜ். பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தில் இடம்பெறும் பண்ணை வீடும் அதன் சுற்றியிருக்கும் இடங்களும் அழகு. சைக்கோ திரில்லர் படத்திற்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ. சக்தி அரவிந்த்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.