‘தமிழ் சினிமா கம்பெனி’ நல்ல கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டும் நம்பி அனைவரும் பாராட்டும் விதத்தில் கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கப் போகும் படங்களுக்கான கதை கேட்கும் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன் கொடுத்திருந்தோம். மொத்தம் 349 பேர் கதை சொல்வதற்காகப் பதிவு செய்திருந்தனர். இதுவரை 52 பேர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டோம். கேட்டவற்றில் 11 கதைகள் சிறப்பாக இருந்தன. இந்த 11 கதைகளையும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரிக்க முடிவெடுத்துள்ளோம்.


– தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கஸாலி, சேர்மனாகவும்,
– இயக்குநர் மற்றும் வசனகர்த்தா லியாகத் அலிகான், முதன்மை ஆலோசகராகவும்
– தயாரிப்பாளர் ஏ.கே.சுடர், முதன்மை செயல் அலுவலராகவும்
– தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தர் ஜின்னா விஜய், மார்க்கெட்டிங் மற்றும் டிஸ்ட்டிரிபியூஸன் செயல் அலுவலராகவும்,
– பாடலாசிரியர் மற்றும் திரை எழுத்தாளர் முருகன் மந்திரம், பப்ளிசிட்டி மற்றும் மீடியா ரிலேஷன்ஸ் செயல் அலுவலராகவும்,
– மீடியா ரிலேஷன்ஸ் ஆர்க்கெஸ்ட்ரேட்டர் நிகில் முருகன், பப்ளிக் & மீடியா ரிலேஷன் எக்ஸிகியூட்டிவாகவும் கொண்டு திரைப்பட தயாரிப்புத் துறையில் களமிறங்குகிறது ‘தமிழ் சினிமா கம்பெனி’.
“தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கதைகளில் 2 கதைகளை விரும்பிக் கேட்ட சக தயாரிப்பாளர் நண்பர்கள் இருவர் தங்கள் கம்பெனி சார்பில் தயாரிக்க முன்வந்திருக்கிறார்கள்.
