சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எம்.எஸ்.தோனி நடித்த புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ அறிமுக பிரதியை வெளியிட்டார் !

cinema news

MS Dhoni shares his first look from sci-fi series Atharva. The Internet cannot keep calm - Trending News News

சென்னை, 23 பிப்ரவரி 2022:  ரசிகர்களின் ஆர்வமிகு எதிர்பார்ப்பு நிறைவுக்கு வந்தது. எம்.எஸ் தோனியின் பிரம்மாண்டமான புதிய யுக கிராஃபிக் நாவலான ‘அதர்வா: தி ஆரிஜின்’ முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இன்று முதல் Amazon.in தளத்தில் புத்தகத்தை ரசிகர்கள் முன்பதிவு மூலம்  ஆர்டர் செய்யலாம் என்று புத்தக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். சிறப்பு முன்பதிவு ஆர்டரில்  புத்தகத்தின் விலை ரூ.1499 ஆகும்.

அதர்வா: தி ஆரிஜின் புத்தகத்தின்  தயாரிப்பாளர்கள் புத்தகத்தின் முன் அட்டையை தற்போது  வெளியிட்டுள்ளனர், இதில் எம்எஸ் தோனி முந்தைய மோஷன் போஸ்டரில் இருந்த தோற்றத்தை விட, முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வசீகரமாக தோற்றமளிக்கிறார் எம்.எஸ் தோனி. தங்க கவச உடையில், அவரது டிரேட்மார்க் நீண்ட கூந்தலுடன், மிடுக்கான அழகுடன் ஒரு சூப்பர் ஹீரோவின் தோற்றத்தில் உள்ளார். அவரது தோற்றம்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களை மேலும் ஏங்க செய்துள்ளது.
புத்தக வெளியீடு குறித்து எழுத்தாளர் திரு.ரமேஷ் தமிழ்மணி கூறியதாவது…,
“சில வாரங்களுக்கு முன்பு அதர்வா: தி ஆரிஜின் நாவலின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம், எம்.எஸ். தோனி ரசிகர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பு பிரமிப்பை தரும்படி இருந்தது. ரஜினி சார் எங்களின் உழைப்பை அங்கீகரித்து, முதல் பிரதியை வெளியிட்டது, உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதர்வா எனது முதல் புத்தகம் என்றாலும், எனக்குப் பிடித்த நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. எம்.எஸ்.தோனி  என் மீதும், என் கதையின் மீதும் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் புத்தகம் குறித்த பயணத்தில்  என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய விதம் ஆகியவற்றிற்காக நான் அவருக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அதர்வா எனும் இந்த புதிய மாய உலகின்  புதிய கதைசொல்லல் முறையை வாசகர்கள் கொண்டாடுவதை காண ஆவலாக காத்திருக்கிறோம்.அவர் மேலும் கூறுகையில்.., “என்னை நம்பி, இந்த புத்தகம் முடிவடையும் வரை மிகப்பொறுமையாக குழிவினர்  திரு.வேல்மோகன், திரு.வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு.அசோக் மேனர் ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றினர். எனது பார்வையை உயிர்ப்பிக்க எங்கள் குழு பல ஆண்டுகளாக அயராது உழைத்தது, இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சூப்பர் ஹீரோ மற்றும் ஆக்‌ஷன் கதைகளை விரும்புபவர்களும், தோனியின் அபிமானிகளும் இந்தப் புத்தகத்தை ரசிப்பார்கள் மற்றும் இது ஒரு தனித்துவமான வாசிப்பு அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.புத்தகத்தை வாங்கும், வாசகர்கள் அத்துடன் ஒரு பிரத்யேக AR செயலிக்கான அணுகலை இலவசமாக பெறுவார்கள், அதில் ஒருவர் கதாபாத்திரங்களின் 3D மாதிரிகள் மற்றும் அதர்வாவின் கற்பனை உலகில் அமைக்கப்பட்ட சில கேம்களை அனுபவிக்க அதிலுள்ள பக்கங்களை ஸ்கேன் செய்யலாம். இந்தியாவில் ஆக்மென்டட் ரியாலிட்டி அம்சத்தை அறிமுகப்படுத்திய முதல் நாவல் இந்த புத்தகம் என்பது குறிப்பிடதக்கது.
Watch: MS Dhoni Shares Teaser Of His Sci-Fi Series 'Atharva'இது குறித்து எம்.எஸ்.தோனி கூறுகையில்..,

“அதர்வா: தி ஆரிஜின் எனும் ஒரு புதிய  திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது திறமையான மற்றும் ஆர்வமுள்ள தனிநபர்களின் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான படைப்பாகும். ரஜினி சார் குழுவின் பணியை அங்கீகரித்து பாராட்டியுள்ளார், மேலும் அவர் எங்கள் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.அதர்வா: தி ஆரிஜின், ரமேஷ் தமிழ்மணியால் எழுதப்பட்ட மற்றும் எம்.எஸ். தோனியை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட புதிய கால கிராஃபிக் நாவல், இப்போது Amazon.in இல் பிரத்தியேகமாக முன்பதிவு முறையிலான ஆர்டர்களில் கிடைக்கிறது. 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச ஷிப்பிங்குடன், சிறப்பு முன்கூட்டிய ஆர்டர் சலுகையாக புத்தகத்தின் விலை ரூ.1499 ஆகும்.