‘வைகைப்புயல்’ வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

cinema news
0
(0)

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் தொடங்கின. வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர். இதன்போது படத்தின் தயாரிப்பாளரும் , தொழிலதிபருமான லைகா குழும  உரிமையாளர் சுபாஷ்கரன், அந்நிறுவனத்தின் துணை தலைவர்  பிரேம், அந்நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி  G.K.M தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

‘வைகைப்புயல்’ வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும்,  அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘சர்பட்டா பரம்பரை’ ஆகிய படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் இசையில் உருவாகிவரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் பாடலுக்கும் அதிகளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.