இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர் முனீஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் “ மிடில் கிளாஸ்”

cinema news
0
(0)

தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச்சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory  தயாரிப்பாளர் G.டில்லி பாபு. அவரது தயாரிப்பில் மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறிய நிலையில், அடுத்ததாக “கள்வன், மிரள்” போன்ற பல நம்பிக்கைக்குரிய படங்களை தயாரித்து வருவது, ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பல பெரிய அறிவிப்புகள் வரவிருக்கும் நிலையில், இத்தயாரிப்பு நிறுவனம் தற்போது அதன் அடுத்த படைப்பாக ‘மிடில் கிளாஸ்’ திரைப்படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன், ராதா ரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன் (கோடாங்கி), குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் 27, 2022 அன்று தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மிடில் கிளாஸ் திரைப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி, அசத்தலான பொழுதுபோக்கு குடும்ப டிரமா திரைப்படமாக உருவாகிறது.
இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் எழுதி இயக்குகிறார். தொழில்நுட்பக் குழுவில் சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), சந்தோஷ் தயாநிதி (இசை), MSP மாதவன் (கலை), ஷான் லோகேஷ் (எடிட்டிங்), டான் அசோக் (ஸ்டண்ட்ஸ்), கார்த்திக் நேத்தா & கதிர்மொழி (பாடல் வரிகள்),K.Poornesh (Executive Producer), SS.ஸ்ரீதர் (தயாரிப்பு நிர்வாகி), வின்சி ராஜ் (வடிவமைப்பு),J.நந்தா (உடைகள்), வினோத் சுகுமார் (மேக்கப்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்), DEC – டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (புரமோஷன் & டிஜிட்டல் மார்க்கெட்டிங்), KV துரை (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்).

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.