‘முதல் நீ முடிவும் நீ’ முதல் திரைப்படம் ‘விலங்கு’ இணைய தொடர் வரை ப்ளாக்பஸ்டர் படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ 5 நிறுவனம், சமீபத்தில் வெளியான நடிகர் விஷாலின் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான “வீரமே வாகை சூடும்” திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 4, 2022 உலகம் முழுதும் பிரத்யேகமாக வெளியிடுகிறது.
தென்னிந்திய திரைத்துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்துள்ள இப்படம், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில் ஒளிப்பரப்படவுள்ளது. இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாதி, ரவீனா ரவி, யோகி பாபு, ரமணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வலுவான கதை மற்றும் நட்சத்திர நடிகர்களின் சிறப்பான நடிப்பால், பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, படம் வெளியான தொடக்க வாரத்தில் ரசிகர்களின் வாய்வழி பாரட்டினால் பலரையும் சென்றடைந்து, நல்ல வெற்றியை பெற்றது. தற்போது ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளதால், பெரிய திரையில் இப்படத்தை பார்க்கத் தவறிய பார்வையாளர்கள் மற்றும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்கள் தங்கள் வீடுகளில் அமர்ந்து மிக எளிதாக ரசிக்கலாம்.
ஜீ5 தளம் அதன் சந்தாதாரர்களுக்கு, தொடர்ந்து பாராட்டுக்குரிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை தந்து அவர்களை மகிழ்வித்து வருவது குறிப்பிடதக்கது. இத்தளத்தில் சமீபத்தில் திரையிடப்பட்ட ஒரிஜினல் இணைய தொடரான ‘விலங்கு’ தமிழ் இணைய தொடர்களின் வழமையை உடைத்து, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், இந்தத் தொடர் தமிழ் இணைய ஓடிடி தளத்தில் பல புதிய மைல்கற்களை ஏற்படுத்தி ஜீ5 தளத்தில் அதிமான பார்வைகளை பெற்று பிளாக்பஸ்டர் இணைய தொடராக மாறியுள்ளது.விஷால் நடிப்பில் ஆக்சன் திரில்லரான “வீரமே வாகை சூடும்” திரைப்படம் ஜீ5 தளத்தில் மார்ச் 4,2022 தமிழிலும், தெலுங்கில் சாமந்திடு மற்றும் கன்னடத்தில் ஒப்பா என்ற பெயரில் வெளியாகிறது.