தமிழ் டிஜிட்டல் உலகில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடரின் ஐந்து அத்தியாயங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஜனவரி 14ஆம் தேதியன்று வெளியிடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சில சிறந்த பிராந்திய உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்தும் அமேசான் பிரைம் வீடியோவின் முயற்சி. ‘புத்தம் புது காலை’ மூலம் தொடங்கியது. தற்போது ‘புத்தம் புது காலை விடியாதா..’என்ற பெயரில் புதிய முயற்சியைத் தொடர்கிறது.இந்த ‘புத்தம் புது காலை’ தொடரின் இரண்டாவது பாகமாக ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட அமேசான் ஒரிஜினல் தொடர் ‘புத்தம் புது காலை விடியாதா.’, இந்தியாவில் இரண்டாவது முறை லாக்டவுன் நடைமுறையில் இருந்தபோது காதல், நம்பிக்கை மற்றும் மனிதநேயம் குறித்த கதைகளை இந்த ஐந்து அத்தியாயங்களில் பகிர்ந்து கொள்கிறது.‘புத்தம் புது காலை’ தொடரின் முதல் பாகம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு, இதன் இரண்டாம் பாகத்தில் தங்களது படைப்புகளை இடம்பெறச் செய்த படைப்பாளிகள், தங்களின் வித்தியாசமான கதைகளை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
‘புத்தம் புது காலை விடியாதா..’ தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்..
• பாலாஜி மோகன் இயக்கிய ‘முக கவச முத்தம்’. இதில் கௌரி கிஷன் மற்றும் டிஜே அருணாச்சலம் நடித்துள்ளனர்.
• ஹலிதா ஷமீம் இயக்கிய ‘லோனர்ஸ்’. இதில் லிஜோமொள் ஜோஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளனர்.
• மதுமிதா இயக்கிய ‘மௌனமே பார்வையாய்’. இதில் நதியா மொய்து மற்றும் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளனர்.
• ரிச்சர்ட் ஆண்டனி இயக்கிய ‘நிழல் தரும் இதம்’. இதில் ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் நிர்மல் பிள்ளை நடித்துள்ளனர்.
*•சூர்யா கிருஷ்ணா இயக்கிய ‘த மாஸ்க்’. இதில் சனந்த் மற்றும் திலீப் சுப்பராயன் நடித்துள்ளனர்.
அமேசான் ஒரிஜினல் தொடரான ‘புத்தம் புது காலை விடியாதா..’ என்ற தொடரில் இடம் பெற்றிருக்கும் தங்களது அத்தியாயங்களை பற்றி இயக்குநர்கள் பின்வருமாறு பகிர்ந்து கொள்கிறார்கள்…
‘மௌனமே பார்வையாய்’ குறித்து அதன் இயக்குநரான மதுமிதா பேசுகையில், ‘
‘ இயக்குநர் ஹலீதாவின் ‘சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போக்கை நாங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டோம் என்று நினைக்கிறன். இது கோவிட்டிற்கு முன்பு இருந்தது. அது கோவிட்டுக்கு பிறகும் தொடரும். உலகம் முழுவதும் தொற்றுநோய் பரவும் காலகட்டங்களில் திரைப்படங்களை உருவாக்குவதை பொருத்தவரை, நாம் வாழும் காலத்தை உங்களுக்கு எடுத்துரைக்கின்றன. மேலும் இந்த திரைப்படம் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு கதைகளை கொண்டுள்ளது. ஓ டி டி எனப்படும் டிஜிட்டல் தள வடிவமைப்பில் பார்த்தாலும் படைப்புகள், அத்தியாய வடிவங்களில் வெளியாவது சிறப்பாக செயல்படுகின்றன. எனவே அந்த தொடர்களை பார்த்தால், நீங்கள் எந்த வகையான திரைப்படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களாக இருந்தாலும், நீங்கள் ரசிக்கும் விசயம் ஒன்று இதில் இருக்கிறது. என்றார்.
‘முக கவச முத்தம்’ குறித்து அதன் இயக்குநர் பாலாஜி மோகன் பேசுகையில்,
” ஒரு கருவை மையப்படுத்தி, வெவ்வேறு கதைகளை, ஒரே தொகுப்பில் இடம் பெற வைக்க இயலும் என்பதற்கு இந்தத் தொகுப்பு சிறந்த வழியாகும். ஏனெனில் பல திரைப்பட படைப்பாளிகள் இதைப் போன்று தங்களது கதைகளை சொல்ல விரும்புகிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான போக்கு. இது மேலும் தொடர வேண்டும். தொடரும் என நினைக்கிறேன். படைப்பாளிகள் தங்களது படைப்புகள் வெளியாகும் நேரம் மற்றும் பார்வையாளர்களின் மனநிலை ஆகியவற்றையும் மனதில் கொண்டு படைப்புகளை உருவாக்க வேண்டும். சில தருணங்களில் பார்வையாளர்களின் ரசனையை மாற்றினால் படைப்பு நன்றாக இருக்காது. இந்த விசயத்தில் படைப்பை வெளியிடும் முன்னரே படைப்பு குறித்து தெளிவான முடிவை எடுக்கவேண்டும். ஏனெனில் அத்தியாயமாக படைப்புகளை பார்வையிடுவதும், தொடராக பார்வையிடுவதும் இயல்பானதுதான்.ஆந்தாலாஜி பாணியிலான படைப்புகள், முழுநீள திரைப்படங்கள் அல்லாத ஒரு விருப்பமாக இருப்பதால். இந்த தொகுப்பு அப்படியே இருக்கும். நான் எப்போதுமே திரைப்படங்கள், ஓ டி டி , யூடியூப். என அனைத்து வடிவங்களிலும் படைப்புகளை உருவாக்க விரும்பினேன். எதிர்காலத்தில் புதிய வடிவத்திலான படைப்புகளுக்கும், அதன் உருவாக்கத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் ரசிகர்களின் ரசனை மாறிக் கொண்டிருப்பது உறுதியாகி தெரிகிறது.” என்றார்.
‘லோனர்ஸ்’ இயக்கிய ஹலிதா ஷமீம் பேசுகையில்,
” ஐந்து படைப்பாளிகளின் எண்ணங்களும் இணைந்து, ஒரே மைய கருவில் பணியாற்றி, அது ஒரு படமாகத் தயாராகும் போது, அது நன்றாக உருவாக்கப்பட்டால்…, பார்வையாளர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும்.” என்றார்.
‘புத்தம் புது காலை விடியாதா..’ தொடரில் உள்ள ஒவ்வொரு கதையும் தனித்தனியாக இருந்தாலும், நம்பிக்கையின் புதிய தொடக்கத்தை கண்டறிந்ததாகவும், புதிய தொடர்புகள் மூலம் புதிய தொடக்கங்களையும் கொண்டு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் குறித்து பேசும் படைப்புகளாகவும், இரண்டாவது அலையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாட்டை மையமாகக் கொண்ட கதைகளாகவும் இடம்பெற்றிருக்கின்றன.ஐஸ்வர்ய லட்சுமி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமொள் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டிஜே அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ள கதைகளை இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் ஆண்டனி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோர் இயக்கியுள்ளனர்.முதல் பதிப்பின் வெற்றியைத் தொடர்ந்து ‘புத்தம் புது காலை விடியாதா’ என்ற இரண்டாவது பாகம் துன்பங்களை எதிர்கொள்ளும் மன உறுதி, மன உறுதியுடன் இதயத்தை தூண்டும் கதைகளை கொண்டிருப்பதால் பார்வையாளர்களை கவரும் என உறுதியளிக்கிறது. ஐந்து அத்தியாயங்களைக் கொண்ட இந்த தொகுப்பு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் முதல் இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.