விறுவிறுப்பான கதைகளத்துடன் பார்வையாளர்களை கவர வருகிறது, ஜீ5 ஒரிஜினல் சீரிஸ் “விலங்கு” !

cinema news
0
(0)

 

ஜீ5 தளமானது, பல்வேறு வகையிலான கதையுடன் மிகச்சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களின் விருப்பமிகு ஒடிடி தளமாகியுள்ளது. ஜீ5 யில் வெளியான ஆட்டோ சங்கர், பிங்கர் டிப், க.பெ.ரணசிங்கம், மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம், பிளட் மணி, முதல் நீ முடிவும் நீ மற்றும் பல ஒரிஜினல் படங்கள், பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளன. தற்போது, ஜீ5 அடுத்ததாக ரசிகர்களுக்காக பிரத்யேகமாக, இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “விலங்கு” என்ற ஒரிஜினல் வெப் சீரிஸை, ஃபிப்ரவரி 18, 2022 வெளியிடவுள்ளது.7-எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், ஒரு புலனாய்வு தொடராக க்ரைம் ஜானரில் உருவாகியுள்ளது, இத்தொடரில் திருச்சிக்கு அருகிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் பரிதி என்ற பாத்திரத்தில், கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இதன் கதை திருச்சியில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, எளிய காவலர்களின் வாழ்க்கையை சொல்வதோடு, அவர்களின் உணர்வுபூர்வமான பக்கத்தையும் சொல்வதாக அமைந்துள்ளது. ஒரு மர்மமான வழக்கை, விமல் விசாரிக்க ஆரம்பிக்கிறார் அதில் ஏற்படும் திருப்பங்களே இந்த தொடர்.விலங்கு தொடரை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் சார்பில் மதன் தயாரித்துள்ளார். அஜீஷ் இசையமைக்க, கணேஷ் படத்தொகுப்பு செய்ய, ஒளிப்பதிவை தினேஷ் புருஷோத்தமன் கையாண்டுள்ளார், கலை இயக்குனர் – G.துரைராஜ்.ஜீ5 ஒரிஜினல் தொடரான  “விலங்கு” பிப்ரவரி 18, 2022 முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.