தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும் இருமொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்த படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சுற்றிலும் உள்ள அலமாரிகளில் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருக்க, மேச்சியின் மீது எரிந்துகொண்டிருக்கும் இரவு விளக்கின் வெளிச்சத்தில் தனுஷ் அமர்ந்து மும்முரமாக ஏதோ முக்கியமான அசைன்மென்ட் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு விரிவுரையாளராக தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போது படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்த படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாள் நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
“இந்த படத்தில் தனுஷ் ஒரு விரிவுரையாதராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பில் தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்று. ஜி.வி பிரகாஷின் இசை யுவராஜின் ஒளிப்பதிவு இரண்டுமே இந்த படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக அமையும்” என்கிறார்
தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா மற்றும் பலர்.
தொழில்நுட்ப குழு