இயக்குனர் பாலாஜி மோகன் மற்றும் trend loud இணைந்து வழங்கும் புதிய இனைய தொடர்

cinema news

சென்னை, ஜனவரி 2022: Trend Loud India Digital  மற்றும்  இயக்குநர்/தயாரிப்பாளர் பாலாஜி மோகனின்  Open Window நிறுவனங்கள் இணைந்து தங்களது  இரண்டாவது படைப்பை பெருமையுடன்  அறிவித்துள்ளன. இந்த புதிய தமிழ் இணைய தொடர்  பாலாஜி மோகனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த, அறிமுக இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார் எழுதி இயக்குகிறார்.அசத்தலான காமெடி டிராமா இணைய தொடராக உருவாகும் இத்தொடரில் பிரசன்னா, SPB சரண், தன்யா பாலகிருஷ்ணா, கனிகா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பல பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் இத்தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  பிப்ரவரி  2022 இத்தொடரின் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது.எழுத்து & இயக்கம்  விக்னேஷ் விஜயகுமார்

கிரியேட்டிவ்  புரடியூசராக பாலாஜிமோகன் பணியாற்ற, ராஜா ராமமூர்த்தி  இத்தொடரை தயாரிக்கிறார்.சஞ்சய் சுபாஷ் & வித்யா சுகுமாரன் இணை தயாரிப்பு செய்கின்றனர்.

ஒளிப்பதிவு : சிவா GRN
இசை : பரத் சங்கர்
படத்தொகுப்பு : ஜூலியன்
கலை இயக்குநர் : ஶ்ரீராமன் E
காஸ்ட்யூம் டிசைனர்: திப்தி தேசாய்
பப்ளிசிடி டிசைன் : சிவகுமார் S (Sivadigitalart)
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : விக்டர் பிரபாகரன்.M
கிரியேட்டிவ் புரடக்சன் குழு : நிவேதா பாஸ்கரன், தன்யா பாலகிருஷ்ணா
புரடக்சன் மேனேஜர் : MV ரமேஷ்