Infiniti Film Ventures வழங்கும்,இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில்,நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் படப்பிடிப்பு டையூ – டாமனில் முழுமையாக நிறைவு பெற்றது!
Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆம், படக்குழுவினர் டையூ-டாமன் படப்பிடிப்பை முடித்துள்ளனர், இது படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி கட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், தனஞ்சயா, ப்ருத்வி அம்பர், முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணன் உட்பட இன்னும் பல நட்சத்திர நடிகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷெட்யூலை முடித்த பிறகு, படக்குழுவினர் ஒரு சிறிய பேட்ச்-அப் வேலைகளை மட்டும் விட்டு வைத்துள்ளனர் அதனுடன் முழு படப்பிடிப்பையும் முடித்துவிடுவார்கள். விஜய் மில்டன் இயக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், டையூ-டாமனின் அழகுமிகு கவர்ச்சியான இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்ள இடங்களிலயே மிகப்பெரும் மகுடமாய் கருதப்படும் இடம் டையூ-டாமன். மாசில்லாத நீலக்கடல் மற்றும் சூரிய ஒளி பரவிய வெள்ளை மணல்வெளிகள், அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தும் கனவை பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கபட்டுள்ளது. பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கபடும் முதல் தமிழ்படம் இது. இயக்குனர் விஜய் மில்டன், இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், அவரது ஒளிபதிவில், இந்த அழகிய காட்சிகள் படமாக்கபட்டுள்ளது. இது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு பெரு விருந்தாக இருக்கும்.
“மழை பிடிக்காத மனிதன்” கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் B, பங்கஜ் போஹ்ரா மற்றும் Infiniti Film Ventures சார்பில் S விக்ரம் குமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் சக்தி வாய்ந்த ஒரு பாத்திரத்திலும் தோன்றுகின்றனர், சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, ‘தலைவாசல்’ விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி மற்றும் இயக்குனர் ரமணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஒரு சிறப்புக் கதாபாத்திரத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிக்கிறார். இவருடைய காட்சிகளை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, விரைவில் இந்த படப்பிடிப்பு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும்.கடந்த ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘கோடியில் ஒருவன்’ உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் நடிகராக விஜய் ஆண்டனியின் கேரியர் கிராஃப் பிரமாண்டமாக உயர்ந்துள்ள நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு வர்த்தக வட்டாரங்களில் பெருமளவில் எதிர்பார்ப்பை குவித்துள்ளது. வருகிறது.