சைபர் க்ரைம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுசி கணேசனின் ‘தில் ஹே கிரே

cinema news
0
(0)

பொதுவாக க்ரைம் தொடர்பான படங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. அந்த ஜானரில் வெளியாகும் மற்றொரு படத்தை பார்க்க பார்வையாளர்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றனர்.. அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘தில் ஹே கிரே’. இந்தப்படத்தில் வினீத் குமார் சிங், அக்‌ஷய் ஓபராய் மற்றும் ஊர்வசி ரவுட்டேலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்..ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சுசி கணேசன் இயக்கியுள்ளார்.. இந்தப்படத்தின் கதையை சுசி கணேசனுடன் தாரிக் முகமது மற்றும் நவின் பிரகாஷ் ஆகியோரும் இணைந்து எழுதியுள்ளனர்..

 
சோஷியல் மீடியாவில் அப்பாவி பெண்களை குறிவைத்து சிக்க வைக்கும் ஒரு ஏமாற்று பேர்வழியை (அக்ஷய்) தேடி கண்டுபிடிக்கும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் (வினீத்) பயணமாக இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.. எப்படி தனக்குள்ளே இரண்டு பக்கங்களை வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் சில குறிப்பிட்ட சூழல்களுக்கு ஏற்றபடி அதை வெளிப்படுத்துவதையும் சிலர் காலத்தின் சோதனையை எதிர்கொண்டாலும், ஒருசிலர் அப்படி இல்லை என்பதையும் வைத்தே இந்தப்படத்தின் தலைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கதைக்களத்தின் மூலம், எதுவுமே கருப்பு வெள்ளை என இல்லை என்பதையும், நேரம் வரும்போது, சிறந்த மனிதர்கள் கூட எப்படி மனம் மாறக்கூடும் என்பதையும் தொட்டு செல்கிறது இந்தப்படத்தின் கதை.. இந்தப்படம் பற்றிய கூடுதல் விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், இப்போது சொல்லப்பட்ட இந்த முன்னுரையே .படத்திற்கு மிக பொருத்தமானதாக இருக்கும்.

 
சூரஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எம்.ரமேஷ் ரெட்டி கூறும்போது, ”என்னுடைய மற்ற அனைத்து பணிகளிலும் நான் இணைந்து பணியாற்றுவது போலவே இந்த கூட்டணியும் அருமையான ஒன்றாக இருந்தது. தில் ஹே கிரே படத்தின் உண்மையான ஹீரோ என்றால் அது கதை தான். வலுவான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயத்தைக் கொண்ட திரைப்படங்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இப்படி ஒரு படத்தை கொடுத்ததற்காக சுசி மற்றும் குழுவிற்கு நன்றி” என கூறியுள்ளார்.
 

இயக்குநர் சுசி கணேசன் கூறும்போது, ”இந்த படத்தின் கதையும் அதன் மொத்த பின்னணியும் இன்றைய காலகட்டத்திற்கான இன்றைய வயதினருக்கான முக்கியமான ஒன்று.. ஆன்லைனில் இன்று பல நிகழ்வுகள் நடக்கும் இந்த நேரத்தில், இந்தப்படம் வெறுமனே ஒரு கதையை மட்டும் சொல்லிவிட்டு போகாமல், தற்போது மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாகவும் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்த கூடிய சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் ஒரு கருவியாகவும் இருக்கும், எம்.ரமேஷ் ரெட்டி மற்றும் அனைவருடனும் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.

 
இந்தப்படம் ஜூலை 2022-ல் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.