‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ 94வது படமாக தயாராகியுள்ள ‘மெகாஸ்டார்’ சிரஞ்சீவியின் ‘காட்பாதர்’ அக்டோபரில் ரிலீஸ்

cinema news

நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்களை மட்டுமே தயாரிப்பதை குறிக்கோளாக கொண்டு செயல்படும் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றுதான் ஆர்.பி.சௌத்ரியின் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ நிறுவனம். கடந்த 3௦ வருடங்களுக்கு மேலாக படத்தயாரிப்பில் 95 படங்கள் என்கிற பிரமாண்ட  இலக்கை இந்த நிறுவனம் எட்டியுள்ளது என்றால் அது சாதாரண விஷயம் இல்லை.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் 94-ஆவது படமாக  சிரஞ்சீவி நடிக்கும் ‘காட்பாதர்’ படம் தயாராகி உள்ளது.. சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் NV பிரசாத்  இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இயக்குனர் மோகன்ராஜா  இயக்கியுள்ளார். பல வெற்றி படங்களை கொடுத்த மோஹன் ராஜா மிக பிரம்மாண்டமாக இயக்கியுள்ள படம் இது
Godfather: Chiranjeevi's film wraps up Hyderabad schedule - Telugu News - IndiaGlitz.com சூப்பர்ஹிட்டான லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார். முக்கியமான வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்  நடிகரான சல்மான்கான் முதல் முறையாக தென்னிந்திய மொழிகளில்  நடித்துள்ள படம் இது . வில்லனாக சத்யதேவ் நடிக்க, மற்றும் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே ,  தான்யா ரவிச்சந்திரன், சுனில், முரளி சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Chiranjeevi as 'Stephen Nedumpalli': The Godfather Teaser ~ News Directory 3தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்த்தாண்டா கே.வெங்கடேஷ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வரும் காட் ஃபாதர் அகிலமெங்கும்  வரும்  அக்டோபரில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 96வது படமாக பஹத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் மலையாளத்தில்  ” ஹனுமான் ”  மற்றும் தமிழில் ‘டாப் கியர்’ படம் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.