full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மகான் -MOVIE REVIEW

காந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் காந்தி மகான் (விக்ரம்). சிறுவயதிலேயே மது ஒழிப்பு, அகிம்சை உள்ளிட்ட காந்தியக் கொள்கைகளை தந்தையால் சொல்லிகொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார். எந்தவித ஆசையையும் அனுபவிக்காமல் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் விக்ரம். இவருக்கும் காந்தியக் கொள்கைகளை கொண்ட சிம்ரனுக்கும் திருமணம் நடந்து குழந்தை பிறக்கிறது. ஒரு நாள் இவர்கள் வெளியூருக்கு செல்லும் போது, விக்ரம் தனது வாழ்க்கையை தனக்கு பிடித்த மாதிரி வாழ நினைக்கிறார். இந்நிலையில், சிறு வயது நண்பனான சத்யவான் (பாபி சிம்ஹா) மற்றும் அவரது மகன் ராக்கி (சனந்த்) இருவரையும் சந்திக்க நேர்கிறது. அத்துடன் விக்ரமின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடுகிறது. 
Mahaan Release Date And Time On Amazon Prime Video, See Details - Filmibeat
இருவரும் சேர்ந்து மதுபானம் தயாரித்து மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறுவிடுகிறார்கள். விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா வாழ்க்கையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தாதா என்னும் ஒரு போலீஸ் அதிகாரி (துருவ் விக்ரம்) வடிவில் பல சிக்கல் வருகிறது. இதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? அந்த போலீஸ் அதிகாரியை எப்படி சமாளிக்கிறார்கள்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.வழக்கம்போல் தன்னுடைய பாணியில் நடித்திருக்கிறார் விக்ரம். எந்த குறையும் சொல்லமுடியாதளவிற்கு அவருடைய நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. காலத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிபடுத்தும் விதம் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. விக்ரமிற்கு ஈடுகொடுக்கும் வகையில் துருவ் விக்ரமின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. சில காட்சிகளில் ரசிகர்களை நடிப்பின் மூலம் மிரட்டுகிறார். தனிகவனம் செலுத்தும் அளவிற்கு பாபி சிம்ஹாவின் நடிப்பு அமைந்துள்ளது. அவருடைய கதாப்பாத்திரத்தின் கெட்டப் மிகவும் கச்சிதம்.
Mahaan' Movie Review: Vikram's Film Directed by Karthik Subbaraj Is Messy  and Doesn't Rise Above Its Ideas
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். பிளாஷ்பேக் காட்சிகள் போன்ற இடங்களில் இவருடைய இயக்குனர் பணி நல்லபடியாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களை உருவாக்கிய விதமும், அவர்களிடையே வேலை வாங்கிய விதமும் அருமை.தன்னுடைய பணியை அழகாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா. கதையின் காட்சிகளை அவருக்கே உரித்தான வடிவமைப்பின் மூலம் காட்சிபடுத்தியிருக்கிறார். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டை காட்சிகளில் இவருடைய இசை அதிக சுவாரசியத்தை கொடுத்து இருக்கிறது.