full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தயாரிப்பாளர்கள் லாபம் ஈட்ட என்எஃப்டி (NFT) திரைப்பட சந்தை தளம்..!

திரைப்பட வர்த்தகம் நடைபெறும் முறையில் பெரும் தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வல்லுநர் செந்தில் நாயகம் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி கே திருநாவுக்கரசு ஆகியோர் இணைந்து இந்தியாவின் முதல் என்எஃப்டி திரைப்பட சந்தை தளமான ஆரக்கள் மூவீஸை அறிமுகப்படுத்தவுள்ளனர்.(NFT)என்எஃப்டி என்று அழைக்கப்படும் ‘Non-fungibleToken ‘ (நான்-ஃபன்ஜபிள் டோக்கன்), மேம்பட்ட பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் திரைப்பட உரிமைகளை வாங்கவும் விற்கவும் வழிவகை செய்கிறது.என்எஃப்டி தனித்துவமானது மற்றும் மாற்ற முடியாதது என்பதால் முறைகேடுகளை தடுப்பதோடு, திரைப்பட தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பான வணிக சூழலை வழங்குகிறது.என்எஃப்டி-க்கள் மூலம், எந்தவொரு சொத்தையும் (நேரடி அல்லது டிஜிட்டல்) “டோக்கன்” முறைப்படுத்தி, பிளாக்செயின் எனப்படும் பரவலாக்கப்பட்ட கோப்பில் சேமித்து, பாதுகாப்பன முறையில் வாங்கவும் விற்கவும் முடியும்.தற்போதைய திரைப்பட வர்த்தக முறை காகிதங்களில் செய்யப்படும் ஒப்பந்தங்களால் நிரம்பியிருப்பதால், நவீன சினிமாவிற்கு அது பாதுகாப்பனதல்ல. மேலும், விற்கப்படும் திரைப்பட உரிமைகளை கண்காணிக்கும் சட்டப்பூர்வ அமைப்பு எதுவும் இல்லாததால், பாதுகாப்பை உறுதி செய்ய என்எஃப்டி உதவுகிறது. இதில் ஆரக்கள் மூவீஸ் முதன்மையான சேவை வழங்குநராக இருக்கும். திரைப்பட தயாரிப்பு, விநியோகம், வசூல் மேலாண்மையில் சர்வதேச அளவில் உள்ள சிறந்த நடைமுறைகளை ஆரக்கள் மூவீஸ் இந்தியாவுக்கு கொண்டு வரும். இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ள டிஜிட்டல்ரூப்பி எனும் மத்திய டிஜிட்டல் பணத்தை தனது பிளாக்செயின் பயன்பாட்டு தளத்தில் ஆரக்கள் மூவீஸ் இணைக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆரக்கள் மூவீஸ் தனது சேவைகளை தொடங்கும். நாடு முழுவதும் உள்ள பிற மொழிகளிலும் விரைவில் விரிவுப்படுத்தப்படும். ஆரக்கள் மூவீஸ் இந்திய திரைப்படங்களை சர்வதேச அளவில் இதுவரை சென்றடையாத சந்தைகளுக்கு எடுத்துச் செல்வதோடு, உலகளவிலான படங்களை வெளியீடு, டப்பிங் மற்றும் ரீமேக்கிற்காக இந்தியாவுக்கு கொண்டு வரும்.
செந்தில் நாயகம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.  சென்னை, பெங்களூர் மற்றும் கனடாவில் அலுவலகங்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான பணியாளர்களோடு 16 வருடங்களாக வெற்றிகரமாக இயங்கி வரும் செடின் டெக்னாலஜிஸின் இணை நிறுவனர் இவர் ஆவார்.
வானொலி, தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படம் உள்ளிட்ட துறைகளில் 15 வருடங்கள் அனுபவமுள்ள ஜி கே திருநாவுக்கரசு, ஒரு ஊடக வல்லுநர் ஆவார். திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஆலோசகரான அவர், தற்போது ஆரக்கள் மூவீஸின் இணை நிறுவனர் மற்றும் இயக்குநராக உள்ளார்.
காமேஷ் இளங்கோவன், இணை நிறுவனர் மற்றும் சிஓஓ, கார்டியன்லின்க்.ஐஓ (அமிதாப் பச்சன் என்எஃப்டி-ஐ வெற்றிகரமாக தொடங்கிய பிறகு 12 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ள நிறுவனம்); பரத் எம் எஸ், நிறுவனர், கிரியா லா & மூத்த அறிவுசார் சொத்துரிமை நிபுணர் (திரைப்படம் மற்றும் டிரேட்மார்க் தொடர்பான முக்கிய வழக்குகளை வென்று பல்வேறு முன்னணி கலைஞர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் பணிபுரிபவர்); வெங்கடேஷ் ஸ்ரீநிவாசன், தலைமை செயல் அதிகாரி, நெக்சஸ் கன்சல்டிங் (வரலாறு மற்றும் விளையாட்டு சார்ந்த தரமான உள்ளடக்கத்தை வழங்குவதற்காக தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நிறுவனங்களுடன் பணியாற்றுபவர்); ஸ்ரீராம், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், காண்டஸ் (ஓடிடி வல்லுநர்) மற்றும் பி ரங்கநாதன் (திரைப்பட தயாரிப்பாளர் & விநியோகஸ்தர், உள்ளடக்க தொழிலில் 25+ வருடங்கள் அனுபவம் மிக்கவர், பாகுபலி மற்றும் ஆர் ஆர் ஆர் கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத்துடன் தனது அடுத்த படத்திற்காக இணைந்துள்ளர்) ஆகியோர் ஆரக்கள் மூவீஸின் ஆலோசகர்கள் ஆவர்.