மீண்டும் வெள்ளித்திரையில் ‘மல்லிகை’ மணம் வீசும் மீராஜாஸ்மின் !

cinema news
0
(0)

தமிழ்,மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக,  இளைஞர்கள் மனதைக்கிறங்கடித்தவர் நடிகை மீரா ஜாஸ்மின். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையில் தோன்றுகிறார். காதல் பிசாசாக மக்கள் மனதை கொள்ளையடித்து சென்ற மீரா ஜாஸ்மின் தமிழ் ரசிகர் இதயங்களை கொள்ளை கொள்ளும்  வகையில் மீண்டும் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.  ரன், சண்டகோழி படங்களில், தனது அழகு கொஞ்சும் நடிப்பால், ரசிகர்களை ஆச்சர்யபடுத்தி, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ் ஜே சூர்யா, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த மீரா ஜாஸ்மின் பல வருடங்களாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

அதையெல்லாம் ஈடுகட்டும் விதமாக, நிறைய தமிழ் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ள நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது மீண்டும்  பல தமிழ்படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் அவர் நடிக்கவுள்ள படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவுள்ளது. ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என முடிவெடுத்துள்ள மீரா ஜாஸ்மின், பல காலமாக சோசியல் மீடியா பக்கம் வராமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது இன்ஸ்டாகிராமில் (Instagram) புதிதாக கணக்கு தொடங்கி இன்று ஒரு நாள் முதலே (55K) 55 ஆயிரம் ரசிகர்களை பெற்றுள்ளார், மேலும் இவர்  மீண்டும் வந்ததில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.மேலும் அவர் இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கிய ‘மகள்’படத்தில் தான் நடிப்பது குறித்து அவர் பகிர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. நமது மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த மீரா ஜாஸ்மின் மீண்டும் நம்மை அசர வைக்க வருகிறார்.
 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.