சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் 20 க்கும் மேற்பட்ட மாநில அரசு வென்ற படங்கள் மற்றும் 4 தேசிய விருது பெற்ற படங்களை தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் ‘மரகத நாணயம்’ புகழ் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’ மற்றும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்படங்களில் ஒன்றான ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய திரைப்படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவ ராஜ்குமார், தெலுங்கு இண்டஸ்ட்ரியின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன், அழகு தேவதை நடிகை பிரியங்கா அருள் மோகன் மற்றும் பல உச்ச நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐஆர் மற்றும் கட்டா குஸ்தி உள்ளிட்ட தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் வெற்றிகரமான நாயகனாக வலம் வருகிறார். தொடர் வெற்றியைத் தரும் திரைப்படங்களைத் தருவதன் மூலம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்களால் மிகவும் மதிப்புமிக்க நட்சத்திரமாகப் பாராட்டப்படுகிறார் .


படத்தின் படப்பிடிப்பு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.