Absolute Pictures சார்பில் A மால்கம் வழங்கும், RDM இயக்கத்தில், சுரேஷ் ரவி நடிக்கும்” பி.ஈ பார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.

cinema news

ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், ரசிகர்களிடமிருந்து  மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பது  ‘பி.ஈ பார்’ படக்குழுவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பி.ஈ பார் படக்குழுவை சந்தோஷத்தில் ஆழ்த்திய முக்கிய காரணங்களில் ஒன்று படத்தின் முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது ஆகும். “பி.ஈ பார்” திரைப்படம், தங்களது அரியர் பேப்பர்களை பாஸ் செய்ய கஷ்டப்படும் இரு மாணவர்களை பற்றியது.  பிரண்ட்ஷிப் மற்றும் காமெடியின் கலவையாக ‘FRI-COM’  என்ற வகையில் உருவாக்கப்படும்  முதல் திரைப்படம் இதுவாகும்.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்‌சன் பணிகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. படத்தின் டீசரை விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது, படத்தினை ஜூன் 2022 உலகமெங்கிலும் தியேட்டருக்கு கொண்டுவர படக்குழு முடிவு செய்துள்ளது.
“காவல்துறை உங்கள் நண்பன்” என்ற திரைப்படத்தின் மூலம், சிறந்த நடிப்பு மற்றும் பட உருவாக்கத்திற்காக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம்  பாராட்டுகளையும் பெற்ற குழு தான் இப்படத்தை உருவாக்கிறது என்பது மற்றுமொரு சிறப்பாகும்.

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை உருவாக்கிய  குழு, முதல் படத்திலிருந்து  முற்றிலும் மாறுபட்டு, அனைவரின்  எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி “பி.ஈ பார்“ என்ற திரைப்படத்துடன் வந்திருக்கிறது.

சுரேஷ் ரவி மற்றும் இஷாரா நாயர் படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ரேணுகா, கல்லூரி வினோத், மற்றும் பல பிரபலமான நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஒளிப்பதிவு- விஷ்ணு ஶ்ரீ K. S, படத்தொகுப்பு- வடிவேல் விமல் ராஜ், இசை- ஆதித்யா & சூர்யா, கலை- சிவராஜ், நடனம்- அஷார், வசனம்- கல்லூரி வினோத், பாடல் வரிகள்- ஞானகரவேல் மற்றும் கானா பிரபா, ஆகியோர் படத்தின் முக்கிய தொழிநுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.

பி.ஈ பார் திரைப்படத்தை Absolute Pictures சார்பில் A. மால்கம் தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பணியை BR Talkies Corporation & White Moon Talkies சார்பில் B. பாஸ்கரன், P  ராஜபொடியன் மற்றும் சுரேஷ் ரவி செய்துள்ளனர்.