பிரைம் வீடியோ அல்லு அர்ஜூன் நடித்த பரபரப்பான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள் நிறைந்த தெலுங்கு திரைப்படம் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 இன் சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்தது

Movies News

 

சுகுமார் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தை ஜனவரி 7 ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் எல்லைப்பகுதியிலும் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரைம் உறுப்பினர்கள் காணமுடியும்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள்  நிறைந்த இந்த திரைப்படத்தில் கதை நாயகனாக அல்லு அர்ஜூன் தோன்றுகிறார், அவரோடு ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹாத் ஃபாசில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்று  நடித்திருக்கிறார்கள்.
வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள்,  டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய  தயாரிப்பு  வரிசை தேர்வுகளை   விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க  சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீடிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான்  பிரைம் வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கு சந்தா செலுத்துவதன் மூலம் புஷ்பா: தி ரைஸ் பார்ட் 1திரைப்படத்தை  காணமுடியும்  மேலும் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பானது, மொபைலில் மட்டுமே காணக்கூடிய  ஒரு தனிநபர் பயன்பாட்டு திட்டமாகும், அது தற்போது  ஏர் டெல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

மும்பை, இந்தியா – 2022 ஜனவரி 5- இந்தியாவில் மிகவும் அதிகமாக விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில்  ஒன்றான பிரைம் வீடியோ அல்லு அர்ஜூன் கதாநாயகனாகத் தோன்றும் பரபரப்பான மெய்சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள் நிறைந்த தெலுங்கு திரைப்படமான புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 திரைப்படத்தின் தனிப்பட்ட சிறப்பு ஒளிக்காட்சித் திரையை (வீடியோ ஸ்ட்ரீமிங்) ஒளிபரப்புவதன் மூலம் இந்த புதிய வருடத்தில் ஒரு மிகச்சிறந்த விருந்தை அதன் பார்வையாளர்களுக்கு வழங்கவிருக்கிறது. சுகுமார் எழுதி இயக்கி, மைத்ரி மூவி மேக்கர்ஸ், மற்றும் முட்டம்செட்டி மீடியாவின் கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்த தெலுங்கு சண்டைத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருக்கிறார், இது குறிப்பிடத்தக்க பிரபல மலையாள மற்றும் தமிழ் திரைப்பட நடிகரான ஃபஹாத் ஃபாசில் தெலுங்கில் அறிமுகமாகும் படமாகவும் அமைந்துள்ளது. இந்த திரைப்படத்தின் முதல் சிறப்புக் காட்சி ஜனவரி 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்தத் திரைப்படம் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் ஒளிபரப்பாகும்.
புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள சேஷாசலம் காட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவிச்செல்லும்  கிளர்ச்சி மிக்க, மெய்சிலிர்க்க வைக்கும்  தீவிரமான கட்டுப்பாடற்ற பயணத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது. இதில் புஷ்பராஜ் என்ற லாரி ஓட்டுநர் பாத்திரத்தில் தோன்றும் அல்லு அர்ஜூன் – செம்மரக்கட்டை கடத்தல் தொழிலில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இந்தப் பகுதிகளில் மிக அதிகளவில்  நடைபெற்றுவரும் செம்மரக் கட்டை கடத்தல் தொழிலில்  ஈடுபட்டுவரும் கடத்தல்காரர்களின் சாம்ராஜ்யத்தை தகர்க்க காவல்துறையினர் மேற்கொள்ளும் முயற்சிகளின் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இடையிலான போராட்ட வரலாறை  இது சித்தரிக்கிறது. விறுவிறுப்பான, வலிமையான மற்றும் சிந்தனையைத் தூண்டும் இந்தக் கதைக்களம், நல்லது அல்லது கெட்டதை பிரித்துப் பார்க்க இயலாத ஒரு சுழலுக்குள் பார்வையாளர்களை இழுத்துச் செல்கிறது. அங்கே தீய  மனிதர்கள் என்று ஒருவருமில்லை அவர்கள் அனைவருமே பல்வேறு சாயல் கொண்ட கதாநாயகர்கள்தான். ரசிகர்கள் மற்றும் திரைப்படத்துறையினரின் ஒட்டுமொத்த பாராட்டையும் இந்தத் திரைப்படம் அள்ளிக் கொண்டது இது வெளியிடப்பட்ட முதல் நாளன்று, அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் ரசிகர் பட்டாளம்  ஒன்று திரண்ட மக்கள் கூட்டம் அலைமோதியதை இந்தியாவெங்கிலுமுள்ள அரங்கு நிரந்த திரையரங்குகளில் காணமுடிந்தது.“சாகசக்காட்சிகள் நிறைந்த புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 பொழுதுபோக்குத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சித் திரையை (வீடியோ ஸ்ட்ரீமிங்கை) பிரைம் வீடியோவில்,  வெளியிடுவதன் மூலம்  இந்தப் புதிய வருடத்திற்கான ஒரு கிளர்ச்சியான தொடக்கத்தை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவது குறித்து நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம்.”  என்று, இந்தியாவின் பிரைம் வீடியோ கன்டென்ட் லைசென்ஸிங் தலைவர், மெங்க்னானி கூறினார். “உள்ளூர் மொழிகளில் எங்களது பரந்த உள்ளடக்கத்தோடு கூடிய  கலைப் பங்களிப்பு தொகுதியில் கூடுதலாக கிளர்ச்சியளிக்கும் ஒரு புதியதாக அமைந்த இந்த அதிக விறுவிறுப்பான திரைப்படம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. அல்லு அர்ஜூன், ஃபஹாத் ஃபாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா போன்ற மிகப் பெரிய முன்னணி நடிகர்கள் தோன்றும்  இந்தத் திரைப்படம் அவர்களின் மிகச்சிறந்த நடிப்பாற்றலால் பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. மைத்ரி மூவீ மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியாவுடன் கூட்டிணைந்து சண்டைக்காட்சிகள் மற்றும் சாகசம் நிறைந்த இந்த மிகப்பிரம்மாண்டமான திரைப்படத்தை உலகம் முழுவதிலுமுள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில்  நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்”.திரைப்படத்தை எழுதி இயக்கிய சுகுமார் கூறினார் “ முதலில் ரசிகர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கு அவர்கள் அளித்த   அன்பு மற்றும் ஆதரவுக்காகவும் மற்றும் இந்தத் திரைப்படத்தை ஒரு வெற்றிக் காவியமாக ஆக்கியதற்காகவும் என் மனப்பூர்வமான நன்றியயைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவின் இதயமாக விளங்கும் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டது. நெருக்கடிமிகுந்த கடும் போட்டி நிலவும் சந்தன செம்மரக் கட்டை கடத்தல் உலகத்தின்  ஊடே பார்வையாளர்களை நடத்திச்செல்லவேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாகவே என் மனதை ஆக்கிரமித்திருந்தது. இந்தத் திரைப்படம் நல்லது மற்றும் கெட்டது என்ற விழுமியங்களை தாண்டி அதை விட்டு விலகிச்சென்று,  மெய்சிலிர்க்க வைக்கும்  ஒரு அதிவிரைவு ரோலர் கோஸ்டர் சாகச  அனுபவத்தை அளிக்கும் கதைக் களமாக இருப்பதை  பார்வையாளர்கள் பாராட்டி ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இதன் அழுத்தமான கதை மற்றும் திறமையான கலைஞர்களின் மிகச்சிறப்பான நடிப்பாற்றலோடு கூடிய  இதை கண்டிப்பாக பார்த்து  ஆழ்ந்து ரசிக்க வேண்டிய ஒரு திரைப்படமாக உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்கு விளங்கச்செய்யும் என்பது உறுதி.”
Pushpa box office collection day 1: Allu Arjun and Rashmika Mandanna starrer springs a surprise in the Hindi marketsஇந்தத் திரைப்படத்தில் தான் பங்கேற்ற பாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டு அல்லு அர்ஜூன் கூறினார், “ கதையைப் படித்து முடித்த அந்த கணமே, அது எனக்கு மிகவும் பொருத்தமானதாக உணர்ந்தேன். சமூகத்தில் கீழ் நிலையில் இருந்து உயர்ந்து மேல் நிலையை அடையும் ஒருவனின் கதை பழைய சலித்துப் போன ஒன்றாகத் தோன்றலாம் ஆனால் இந்தத் திரைப்படத்தில் அவனது பயணம் விவரிக்கப்பட்டிருக்கும் விதம், மற்றும் அவன் பாத்திரத்துக்கு மெருகூட்டும் குணநலனின் பல அடுக்குகள் மற்றும் நுட்பமான உணர்வுகள் மிகவும் தனித்துவமானவை மற்றும் என் தொழில் வாழ்க்கையில் இதற்கு முன் நான் எப்போதும் செய்திராதவை. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக விளங்குவதில் நான் பெருமைப்படுகிறேன். மற்றும் பிரைம் வீடியோ மூலம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் இந்தத் திரைப்படம் சென்றடையப்போகிறது என்பதை அறிந்து முற்றிலும் உற்சாகமடைந்திருக்கிறேன்.”

“பார்வையாளர்கள் இந்தத் திரைப்படத்தை மிக உயர்வாக பாராட்டுவதை காணும்போது, மாதக்கணக்காக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன்.” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்தார்,” அல்லு அர்ஜூன் மற்றும் ஃபஹாத் ஃபாசில் போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. கதையின் தனித்துவமான போக்கு மற்றும் அதை வலிமையாக எடுத்துச் சொன்ன விதம் மற்றும் அத்தோடு கூட, பன்முகத்தன்மை கொண்ட பாத்திரப்படைப்புக்கள் இதை  உருவாக்கியவர்கள்  இந்த திரைப்படத்தை உயிர்ப்புள்ளதாக்க மேற்கொண்ட அளவு கடந்த உழைப்பை வெளிச்சப்படுத்துகிறது.”

தெலுங்கு திரைப்படத்தில் தன் அறிமுகம் குறித்து கூறுகையில் ஃபஹாத் ஃபாசில் சொன்னார், “தெலுங்கு திரைப்படத்துறையில் புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1  எனது அறிமுகத்தை மிகச்சிறப்பான  ஒன்றாகச்செய்திருக்கிறது. என் பாத்திரம் படைக்கப்பட்ட விதத்திலிருந்து, – அதன் தோற்றம், வசனங்கள், மற்றும் சண்டைக் காட்சி வரிசைகள் –அனைத்தின்  ஒவ்வொரு கூறுகளும் கதையோடு பின்னிப் பிணைக்கப்பட்டு, நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அம்மாதிரியான தனித்துவம்  வாய்ந்த் கதாபாத்திரத்தை ஏற்க  தயார்செய்து கொள்ளும் முயற்சிகளை நான் முழுமையாக ரசித்தேன். பிரைம் வீடியோ தனது சேவைகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதின் மூலம் என் நடிப்பின் ஒரு வித்தியாசமான பாணியை உலகெங்கிலுமுள்ள என் ரசிகர்கள் ரசித்து அனுபவிக்கும் விதமாக வழங்குவதில் நான் மிக மிக அதிக  உற்சாமடைகிறேன்.” .