இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட “அன்ன பூரணி” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !

cinema news
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.  கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம். பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம்.
Annapoorani First Look: பிக்பாஸ் லாஸ்லியா - லிஜோமோல் நடித்துள்ள 'அன்னபூரணி' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார்.
 
லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.