செய்தித்துறை அமைச்சர் வெளியிட்ட “ரீ” பட பர்ஸ்ட் லுக்..!

cinema news
ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உளவியல் சார்ந்த பரபரப்பு படமாக உருவாகியுள்ளது ரீ திரைப்படம்.. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் M.P.சாமிநாதன் அவர்கள் வெளியிட்டார்..ரீ திரைப்படத்தை சுந்தரவடிவேல் இயக்க.. பிரசாந்த் சீனிவாசன், பிரசாத், காயத்ரி ரமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.. ஹரிஜி இசையமைக்க தினேஷ்ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்..அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ரீ படக்குழுவினர்  கூறியதாவது…
 
எங்களைப்போல் சிறு தயாரிப்பாளர்களை படம் எடுக்கும்  பொழுது எங்களை அதிகமாக ஊக்குவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் அவர்கள் வெளியிட்டது எங்க படத்திற்கு மேலும் சிறப்பாக நாங்க நினைக்கிறோம் .இதுமாதிரி சிறு சிறு தயாரிப்பாளர்களை அமைச்சர் பெருமக்களும் இந்த அரசும் நல்ல முறையில் மரியாதை செலுத்தி வருகிறது என்று கூறினார்.பத்திரிக்கை துறை சார்ந்த நண்பர்கள் எல்லோரும் இந்த படத்தை மேலும் ஒரு படி உயர்த்தி எங்களைக் கொண்டு போய் மக்களிடையே நல்ல முறையில் சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை .அனைவரையும் திருப்திபடுத்தும் விதமாக எங்களின் “ரீ” படம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று கூறினார்…