டிஸ்னி+ ஹாஸ்டார் – ‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்காக, தனித்துவமான விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!!
சென்னை (அக்டோபர் 19, 2022): சென்னையில் நடக்கவுள்ள இசையமைப்பாளர் அனிருத்தின் முதல் பிரமாண்ட இசை நிகழ்ச்சி அக்டோபர் 21 ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எல்லா திசையிலும் அதன் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையில் இந்நிகழ்வுக்கு முன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இந்த இசை நிகழ்வை தனித்துவமான வழிகளில் விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

சென்னையில் உள்ள மெரினா மாலில் கார்களின் ஹாரன் ஒலிகளை மட்டுமே கொண்டு இசைக்கப்பட்ட அனிருத்தின் “டிப்பம் டப்பம்“ பாடல் அங்கிருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. கார் ஹாரன் ஒலியில் இசைக்கப்பட்ட பாடலைக் கேட்டு அங்கு வந்திருந்த ரசிகர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பத்தினர் என அனைத்து பார்வையாளர்கள் பாடியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர்.

