சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் இல்லத் திருமணம்…

Movies News
இளம் தொழில்முனைவோரும், கோபுரம் சினிமாஸ் உரிமையாளருமான சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் சரணின் திருமணம் 21 பிப்ரவரி 2022 அன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.காலையில் திருமணமும், மாலையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது.பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பைனான்சியர் மற்றும் கோபுரம் சினிமாஸ் நிறுவனர் ஜி என் அன்புச்செழியனின் மகள் தான் சுஷ்மிதா.எத்திராஜ் மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற சுஷ்மிதா, அதைத் தொடர்ந்து எம்பிஏ படித்தார். 25 வயதே ஆகும் இவர் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து பல இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார்.குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன் தான் சரண். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர்  ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
சரண் பி டெக் மற்றும் எம்பிஏ முடித்து சன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநராக உள்ளார். 25 வயதில் தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கியுள்ளார்.திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி கொவிட் விதிமுறைகளை பின்பற்றி பிரமாண்டமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.