சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

Movies News

நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்’ அந்தஸ்தும், அதே நேரத்தில் நம் வீட்டு பையன் போன்ற தோற்றமும் அமைவது மிகவும் அரிது. அப்படிப்பட்ட தகுதியுடன் ஒருவர் வரும்போது உலகளவில் அனைத்து தரப்பினரின் மனதிற்கும் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிடுகிறார். அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தவராக நடிகர் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான “டாக்டர்” உலகளாவிய வகையில் ரசிகர்களின் மனதை வென்று, முழு வர்த்தக வட்டத்திற்கும் லாபகரமான படமாகவும் அமைந்து, அவரது நட்சத்திர அந்தஸ்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியுள்ளது. அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படமான “டான்” ஏற்கனவே வர்த்தக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது, வர்த்தக வட்டத்தில் அப்படத்தை, இப்போதே அவர்கள் பிளாக்பஸ்டர் என்று உறுதி செய்துவிட்டனர். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், 2022 புத்தாண்டின் புதுத்துவக்கமாக, தனது புதிய திரைப்படமான “SK20” குறித்த அறிவிப்பைப் வெளியிட்டுள்ளார்.

Image

நடிகர் சிவகார்த்திகேயன், சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஜதி ரத்னாலு’ படம் மூலம் புகழ் பெற்ற புகழ் அனுதீப் KV கூட்டணியில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்டமான ஒரு புதிய படத்தில் இணைகிறார், Suresh Productions சார்பில் திரு.சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ் D.ராமாநாயுடு அவர்களின் மகன் )
நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் SVCLLP (Sree Venkateswara Cinemas LLP) மற்றும் Shanthi Talkies அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை வழங்குகின்றனர்.நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அனுதீப் ஆகிய இருவருமே தங்கள் திரைப்படங்களில், அவர்கள் வெளிப்படுத்தும், 100% அதிரடியான காமெடி அம்சங்களுக்காக, ரசிகர்களிடம் பிரபலமானவர்கள். இவர்களின் அட்டகாசமான காமெடி திறமை, இப்படத்தை ஒரு நகைச்சுவை திருவிழாவாக மாற்றும். இப்படத்தின் கதை முழுதும் பாண்டிச்சேரியை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது, முழுக்க முழுக்க சிறந்ததொரு நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் S.தமன் இசையமைக்கிறார், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இசையமைப்பாளர் தமன் இணைவது இதுவே முதல் முறை.

Imageபடம் குறித்து இயக்குனர் அனுதீப் கூறும்போது, “திரைத்துறையில் உள்ள பெரிய நட்சத்திர குழுவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நடிகர் சிவகார்த்திகேயனை நடிகராக அல்லாமல் ஒரு மேஜிஷியனாகவே தான் பார்க்கிறேன். திரையில் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும், குறிப்பாக குழந்தைகள் முதல் குடும்பங்களில் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் அவரது திறமை, தமிழ்நாட்டை தாண்டி அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்று தந்துள்ளது. இந்த படம் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு விருந்தாக இருக்கும். இந்த பிரமாண்டமான திரைப்படத்தில், ஒரு பகுதியாக இருக்க எனக்கு வாய்ப்பளித்த இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் தமன் அவர்களின் மாயாஜால இசை அனைத்து திரைப்படங்களுக்குமே ஒரு வலுவான தூணாக அமைந்து வருவது குறிப்பிடதக்கது, அவர் இந்த திரைப்படத்தில் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.SK 20 படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.